உடல் பருமன் குறைக்க, இந்த 3 டிப்ஸ் –ல் 1 முயற்சி செஞ்சு பாருங்க போதும்

உடல் பருமன் குறைக்க, இந்த மூன்று டிப்ஸ்ல் ஒன்று முயற்சி செஞ்சு பாருங்க போதும்

                               உடல் பருமன் குறைக்க

நிவாரணங்கள்:

1. தக்காளிச் சாறு & எலுமிச்சைப் பழச்சாறு இவைகளிலுள்ள வைட்டமின் சி தோலை இளமையாக வைத்து, உடல் பருமனும் குறைந்து விடும்.

2. 100 கிராம் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேன் விட்டு பருகி வரலாம் அல்லது எலுமிச்சம் பழச்சாறு 50 கிராம் சேர்த்து பருகி வர உடல்பருமன் குறையும்.

3. ஆமணக்கின் வேரை நன்றாக நைய இடித்து தேன் கூட்டிப் பிசைந்து 250 மிலி தண்ணீரில் ஊற வைத்து, ஒரு நாள் முழுவதும் ஊறியதும் கசக்கிப் பிழிந்து சக்கைகளை களைந்து காலையில் வெறும் வயிற்றில் பருக உடல் பருமன் குறையும். 4,833 total views,  15 views today

பத்து வயதில் பருமன் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? | Weight loss tips for Kids in Tamil

பத்து வயதில் பருமன் எடை குறைய என்ன செய்ய வேண்டும்?| Weight loss tips for Kids in Tamil

Best Weight loss tips for Kids in Tamil

  •  தவறான உணவுப்பழக்கங்கள் மற்றும் உடல் உழைப்புக் குறைவு போன்றவற்றால் உடல் பருமன் ஏற்படுகிறது.
  • உணவைப் பொறுத்தவரை, கொழுப்பு நிறைந்த ஜங்க்ஃபுட் போன்றவற்றை முழுவதுமாக நிறுத்த வேண்டும்.
  • குளிர் பானங்கள், கடைகளில் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை முடிந்த அளவு தவிர்த்துவிட வேண்டும்.
  • மாறாக பச்சைக் காய்கறிகள், பழங்கள், குறிப்பாக ஆரஞ்சு போன்ற நார்ச் சத்துள்ள பழங்கள், சாலட் வகைகளை அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • உணவுக்கு முன்பே பழம், காய்கறிகளை உட்கொண்டு, பிறகு உணவை எடுத்துக் கொள்வது இன்னும் சிறந்தது.
  • அரிசி உணவைக் குறைத்து, கோதுமையை அதிகமாகச் சேர்க்க வேண்டும்.
  • சிக்கன், மீன் போன்றவற்றைக்கூட, குழம்பில் சேர்க்கலாம். ஆனால், எண்ணெயில் பொரிக்கக் கூடாது. உருளைக்கிழங்கு, முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்க்க வேண்டும். • கொழுப்பு எதில் இருந்தாலும் அதை அறவே தவிர்க்க வேண்டும்.
 • பாக்கெட்டுகளில் விற்கும் சிப்ஸ்தான் இந்தப் பிரச்னைக்கு முதல் எதிரி. எனவே, அதை வாங்கிக் கொடுப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.
 • இந்த வயதில் ஜிம் உடற்பயிற்சி தேவையற்றது. அவர்களுக்குப் பிடித்த விளையாட்டுக்களில் தினமும் ஓரிரு மணிநேரம் விளையாட விட்டாலே போதும். லோரிகள் எரிக்கப்படும்.
 • தினமும் காலை அல்லது மாலை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லலாம். பள்ளிகள், கடைகளுக்கு நடந்தோ அல்லது மிதிவண்டியிலோ அனுப்பலாம்.
 • முக்கியமாக, கணினி முன் விளையாடுவது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது, ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து டிவி பார்ப்பது போன்றவற்றை முடிந்தவரை தடுக்க வேண்டும்.
 • வேறு ஏதேனும் நோய்களின் அறிகுறியாக அல்லது மரபணு ரீதியான காரணங்களால்கூட, திடீர் மற்றும் நீண்ட கால உடல் பருமன் வரலாம். அதற்கு, கண்காணிப்புடன் கூடிய ஆலோசனை தேவை.
 • ஒரு நல்ல மருத்துவரிடம் குழந்தையை அழைத்துச் சென்று, உடல் பருமனுக்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது நல்லது. 3,225 total views

பிரண்டை ஊளைச் சதையைக் குறைக்குமா – இது தெரிஞ்சா அசந்து போவிங்க

பிரண்டை ஊளைச் சதையைக் குறைக்குமா – இது தெரிஞ்சா அசந்து போவிங்க

ஊளைச் சதையைக் குறைக்கும் –பிரண்டையின் மகிமை

பிரண்டை

வேறுபெயர்கள்: வச்சிரவல்லி

தாவரப்பெயர் : vitis quadrangularis

தாவரக்குடும்பம் : vitaceae

வகைகள் : முப்பிரண்டை சதுப்பிரண்டை, மூங்கில் பிரண்டை அல்லது கோப்பிரண்டை, உருண்டைப்பிரண்டை, களிப்பிரண்டை, புளிப்பிரண்டை, தீப்பிரண்டை

வளரும் தன்மை:

பொதுவாக இது வெப்பமான இடங்களில் வளர்கிறது. கொடி வகையைச் சார்ந்தது. இந்தியாவிலும் , இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது. சதைப்பற்றான நாற்கோண வடிவத்தண்டுகளையுடைய ஏறு கொடி, பற்றுக்கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டிருக்கும் சாறு உடலில் பட்டால் நமச்சல் ஏற்படும். சிவப்பு நிற உருண்டையான சிறிய சதைக் கனியுடையது. விதைஇ கொடி மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதில் ஆண் பிரண்டை, பெண் பிரண்டை என இரு வகைப்படும். பெண் பிரண்டையின் கணு 1 முதல் 11ஃ2 அங்குலமும் இருக்கும். இலைகள் முக்கோண வடிவில் முள் இல்லாமல் பெரிதாக இருக்கும். காரத்தன்மையும் எரிப்புக் குணமும், இயல்பும் உடையது.


பயன்தரும் பாகங்கள்:

வேர் தண்டு ஆக்கியவை.

பயன்கள்:

மூலம் ,வயிற்றுப்புண் ,தாது நட்டம் வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல் இதன் உப்பே சிறந்த குணமுடையது .

பிரண்டை உப்பு:

பிரண்டையை உலர்த்தி எடுத்துச் சாம்பலாக்க வேண்டும். ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து வடிகட்டி அரை நாள் தெளிய வைக்க வேண்டும் தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8-10 நாள் வெய்யலில் காயவைக்கவும் நீர் முழுவதும் சுண்டி உலர்ந்தபின் படிந்திருக்கும் உப்பினை சேர்த்து வைக்கவும்.


பேதி வாந்தி:

குழந்தைகளுக்கு வரும் வாந்தி, பேதிக்கு ஒரு கிராம் அளவு பாலில் இந்த உப்பைக் கரைத்து மூன்று வேளை கொடுக்க குழந்தை வாந்தி,பேதி குணமாகும்.

செரியாமை குணமடையும். பெரியவர்களுக்கு 2-3 கிராம் வடித்த கஞ்சியில், மோரில் கொடுக்கவும்.

வாய்ப்புண்:

வாய்புண், வாய் நாற்றம், உதடு, நா வெடிப்பு ஆகியவற்றுக்கு இதன் உப்பை 48-96 நாள் இரு வேழை சாப்பிட குணமாகும்.

மூலம்:

நவ மூலம், சீழ் ரத்தம் வருதல், அரிப்பு, கடுப்பு ஆசனவாயில் எரிச்சல் இருந்தாலும் இந்த உப்பை 3 கிராம் அளவு வெண்ணையில் 24-48 நாள் இரு வேழை கொடுக்க குணமாகும்.

பிரண்டை பற்பம்:

100 கிராம் பிரண்டை , 100கிராம் உப்புடன் ஆட்டி அடை தட்டி மண் குடுவையில் வைத்துச் சீலைமண் செய்து புடம் போட்டு எடுக்க சாம்பல் பற்பமாக மாறி இருக்கும். உப்பைப் போலவே எல்லா நோய்களுக்கும் இந்த பஸ்பத்தைக் கொடுக்கலாம்.

உடல் பருமன்:

பிரண்டை உப்பை 2-3 கிராம் பாலில் கொடுத்துவர இரு திங்களில் உடல் பருமன் குறைந்து விடும் ஊளைச் சதைகளையும் குறைக்கும்.

ஆஸ்த்துமா:

இந்த உப்பை தென்னங்கள்ளில் கொடுத்துவர ஆஸ்த்துமா, எலும்புருக்கி மதுமேகம் , நீரழிவு குணமடையும்.

சூதகவலி:

மூன்று வேளை 2 கிராம் நெய்யில் கொடுக்க சூதகவலி குணமடையும்.

தாதுநட்டம்:

பிரண்டை உப்பை 2 கிராம் அளவு ஜாதிக்காய்த் தூள் 5 கிராமுடன் கலந்து சாப்பிட்டு வர தாது நட்டம் குணமடையும் வீரியம் பெருகும் உடம்பு வன்மை பெரும்.


செரியாமை:

பிரண்டை இலையையும், தண்டையும் உலர்த்தி எடுத்து சூரணம் செய்து கொண்டு அதனோடு சுக்குத்தூள், மிளகுததூள் அளவாக எடுத்துக் கொண்டு உள்ளுக்குள் கொடுத்துவர செரியாமை தீரும். சாப்பிட்டு வர நட்டம் குணமடையும் வீரியம் பெருகும் உடம்பு வன்மை பெரும்.

செரியாமை:

பிரண்டை இலையையும், தண்டையும் உலர்த்தி எடுத்து சூரணம் செய்து கொண்டு அதனோடு சுக்குத்தூள், மிளகுத்தூள் சம அளவாக எடுத்துக் கொண்டு உள்ளுக்குக் கொடுத்துவர செரியாமை தீரும்.

இதனை கற்கண்டு கலந்த பாலுடன் உட்கொண்டால் பரு உடலுக்கு நன்மை தரும். நெய் விட்டு பிரண்டைத் தண்டை வறுத்து துவையலாக அரைத்து உண்டு வர வயிற்றுப் பொருமல், சிறுகுடல், பெருகுடல் புண் நீக்கி நல்ல பசி உண்டாகும்.

பிரண்டைத் தண்டை நெய்விட்டு வறுத்து அரைத்து கொட்டைப் பாக்களவு வீதம் தினம் இரு வேழையாக எட்டு நாட்கள் உட் கொண்டு வந்தால் மூல நோயில் உண்டாகும் நமச்சலும், குருதி வடிதலும் நிற்கும்.

காதுவலிக்கும், காதில் சீழ்வடிதலுக்கும் பிரண்டையை தீயில் வதக்கி சாறு பிழிந்து இரண்டு துளி காதில் விட்டு வர குணம் தெரியும். மூக்கில் வடியும் ரத்தம் நிற்க இந்தச்சாற்றை இரண்டு அல்லது மூன்று துளி மூக்கில் விடலாம். இந்தச் சாற்றையே தகுந்த அளவில் உள்ளுக்குக் கொடுத்து வர பெண்களுக்கு உண்டாகும். மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும்.

பிரண்டை, பேரிலந்தை வேப்ப ஈர்க்கு, முருங்கன் விதை, ஓமம் இவைகளை சமஅளவு எடுத்து கஷாயமிட்டு அருந்தி வர, வயிற்றில் உள்ள வாயு நீங்கும். வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி நல்ல பேதி ஏற்படும்.

முறிந்த எலும்பு விரைவில் சேர்வதற்கு இதன் வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் வீதம் உண்டு வரலாம். இதனை வெந்நீரில் குழைத்து பற்றிட்டும் வரலாம். பிரண்டைத் தண்டை எடுத்து சுண்ணாம்பு தெளி நீரில் ஊற வைத்து வேளைக்கு ஒன்றாக உட்கொண்டு வந்தால் நல்ல பசி ஏற்படும்.

பிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் புளியையும் உப்பையும் கூட்டிக்காச்சி குழம்பு பதத்தில் இறக்கி பற்றிட்டு வந்தால் சுளுக்கு, கீழே விழுந்து அடிபடுதல், சதை பிறளுதல், வீக்கங்கள் குணமடைந்து நல்ல பலன் கிடைக்கும்.

 4,104 total views,  6 views today