உடல் பருமன் குறைக்க, இந்த 3 டிப்ஸ் –ல் 1 முயற்சி செஞ்சு பாருங்க போதும்

உடல் பருமன் குறைக்க, இந்த மூன்று டிப்ஸ்ல் ஒன்று முயற்சி செஞ்சு பாருங்க போதும்

                               உடல் பருமன் குறைக்க

நிவாரணங்கள்:

1. தக்காளிச் சாறு & எலுமிச்சைப் பழச்சாறு இவைகளிலுள்ள வைட்டமின் சி தோலை இளமையாக வைத்து, உடல் பருமனும் குறைந்து விடும்.

2. 100 கிராம் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேன் விட்டு பருகி வரலாம் அல்லது எலுமிச்சம் பழச்சாறு 50 கிராம் சேர்த்து பருகி வர உடல்பருமன் குறையும்.

3. ஆமணக்கின் வேரை நன்றாக நைய இடித்து தேன் கூட்டிப் பிசைந்து 250 மிலி தண்ணீரில் ஊற வைத்து, ஒரு நாள் முழுவதும் ஊறியதும் கசக்கிப் பிழிந்து சக்கைகளை களைந்து காலையில் வெறும் வயிற்றில் பருக உடல் பருமன் குறையும். 4,833 total views,  15 views today

தலையை அசைத்தால் உடல் எடை குறையுமா?

தலையை அசைத்தால் உடல் எடை குறையும்!

நமது முன்னோர் காலத்தில் எல்லாம் குழந்தை கொழுக்கு மொழுக்கு என்று குண்டாக இருந்தால் அழகு-ஆரோக்கியம் என நினைத்தார்கள். இவ்வாறு உடல் குண்டாக இருந்தால் அதற்கு மருத்துவ ரீதியான பார்வை இல்லாமல் அப்போது இருந்தது.

மருத்துவ அறிவியலின் அபரிமித வளர்ச்சி காரணமாக இதய நோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு முக்கியக் காரணமாக விளங்குவது உடல் பருமன்தான் என்பதை மருத்துவ உலகம் கண்டுபிடித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தொடங்கி விட்டது.

 • வருங்கால நோய்களுக்கு வினையாக உள்ளது உடல் பருமன் தான் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. உடல் பருமனைத் தீர்மானிப்பவை எவை ஒருவரது உயரம், எடையை அடிப்படையாகக் கொண்டு உடல் பருமன் தீர்மானிக்கப்படுகிறது.
 • மருத்துவ சூத்திரம் இன்றி உடல் பருமனைப் புரிந்து கொள்ள எளிய வழி உள்ளது. உதாரணமாக ஒருவரது உயரம் 260 செ.மீ. உயர் ரத்த அழுத்த நோய், இதயக் கோளாறுகள், பித்தப் பை கற்கள், பெருங்குடல் புற்று நோய், கர்ப்பப் பை புற்று நோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கு உடல் பருமன் முக்கியக் காரணியாக உள்ளது.
 • உணவுக் கட்டுப்பாட்டு, மருந்துகள், எண்டாஸ்கோப்பி மூலம் உடல் எடையைக் குறைத்து உடல் பருமன் பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை முறை அமையும்.

1) உணவுக் கட்டுப்பாட்டு மூலம் 5 முதல் 6 கிலோகிராம் வரை உடல் எடையைக் குறைக்க முடியாது.

2) மருந்துகள் மூலம் உடல் எடையைக் குறைப்பது மிகவும் சாத்தியமில்லை. மேலும் மருந்துகள் காரணமாக பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

3) எண்டாஸ்கோப்பி சிகிச்சை நல்ல பலனைத் தரும். அதாவது, எண்டாஸ்கோபி மூலம் பலூனை இரைப்பையில் வைத்து 10 முதல் 20 கிலோ வரை உடல் எடையைக் குறைக்க முடியும்.

 • இன்ட்ரா கேஸ்ட்ரிக் பலூன் ட்ரீட்மென்ட்ஃபார் ஒபிசிட்டி என்று அழைக்கப்படும் இந்த சிகிச்சையில் பலூன் மூலம் இரைப்பையின் அளவு குறைக்கப்படுவதால், உணவில் அளவு குறைந்து உடல் எடை குறையும்.
 • உடல் பருமன் பிரச்சனை தீவிரமாக உள்ளோருக்கு (பிஎம்ஐ கணக்கீடு 40-க்கு மேல் இருந்தால்), இரைப்பையின் அளவைக் குறைக்க பை-பாஸ் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். கேஸ்ட்ரிக் பைபாஸ் சர்ஜரி என்று அழைக்கப்படும் இந்த அறுவைச் சிகிச்சை மூலம் சிறுகுடலின் முன் பகுதிக்கு உணவு நேரடியாகச் செல்லாமல் நேரடியாக குடலின் நடுப் பகுதிக்குச் செல்லும்.
 • இதனால் உணவின் அளவு குறைந்து சிறிதளவு சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பி விட்டது போன்ற உணர்வு ஏற்படும்.சிகிச்சைக்குப் பிறகு:

உடல் பருமனைக் குறைப்பதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகு, ஆயள் முழுவதும் டாக்டர் கூறியவற்றை தவறாமல் கடைப்பிடிப்பது அவசியம். அதாவது, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்கா விட்டால் உடல் பருமன் பிரச்சனை மீண்டும் தலைதூக்கும்;.

தலைப்பின் விடை இதோ:-

உடல் பருமன் பிரச்சனை உள்ளோர் வீட்டில் தட்டில் உணவு பரிமாறப்படும்போது, போதும் போதும் என தலையை இருபுறமும் பக்கவாட்டில் அசைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து உணவின் அளவைக் குறைக்கும் நிலையில் உடல் எடை அதிகரிக்காது. உடல் பருமன் பிரச்னையும் வராது.


 6,867 total views

சித்த மருத்துவம் உடல் பருமனுக்கு விடை கொடுக்கும் – 100 சதவிகிதம்

சித்த மருத்துவம் உடல் பருமனுக்கு விடை கொடுக்கும்

உடல் பருமன் இன்று உலகின் பெரும்பாலோருக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. வயிற்றில் காணப்படும் அக்கினியின் மாறுபாட்டால் உடல் பருமன் ஏற்படுகிறது என்கிறது சித்த மருத்துவம்.

மனிதனின் வயிற்றில் உள்ள, மந்தாகினி, தீஷாக்கினி, சமானக்கினி, விஷமாக்கினி ஆகிய நான்கு அக்கினிகளால் நாம் சாப்படும் உணவு எரிக்கப்பட்டு ஜீரணமாகின்றன.

நான்கு அக்கினிகள்:-

இதில் சமனாக்கினி என்பது உண்ணும் உணவை நன்கு ஜீரணித்து நிதானமாகச் செயலாற்றும் தன்மையுடையது.

விஷமாக்கினி என்பது செரிக்கும் அக்கினி, தன் இயல்பு மாறி செரிக்காமல் உண்ணும் உணவை விஷமாக்கி நோயை உண்டுபண்ணும்.

மந்தாக்கினி என்பது பசிக்காமல் நேரம் பார்த்து உண்பது. உண்ணும் உணவை மிக குறைவாக ஜீரணம் செய்யக்கூடியது. கொழுப்புகள் சரிவர ஜீரணிக்காமல் உடலில் படிதலும் சர்க்கரை நோய் வர காரணமாக உள்ளது.

நீஷாக்கினி என்பது உண்ணும் உணவை மிக விரைவில் ஜீரணமாக்கி சத்துக்களையும் எரித்து விடுவது.

காலை புல், மதியம் ஆப், இரவு குவாட்டர்:

சித்த மருத்துவம் வயிற்று அக்னியை இயல்பாக்க கீழ்க்கண்ட முறைகளையும், உணவுகளை எப்படி உண்பது என்பதையும் கூறுகிறது.

காலையில் 5-6 மணிக்கு எழுதலும், குளித்த பின் வயிறு நிறைய சாப்பிடுவது நல்லது, மதியம் அரை வயிறு உணவும், இரவு கால் வயிறு உணவும் என பழக்கப்படுத்திக கொள்ள வேண்டும்.

காய்ச்சிய நீர் தேவையான அளவு குடிக்க வேண்டும், உணவு சாப்பிட்ட பின், 3 மணி நேர இடைவெளியில் எந்த உணவையும் சாப்பிடக் கூடாது என்று நம் மனதுக்குக் கட்டளையிட்டு அதன்படி நடக்க வேண்டும்.

இஞ்சி கலந்த டீ, அக்னியை நன்கு தூண்டும், பசி எடுத்து சாப்பிட வைக்கும். கடின உணவுகள் சாப்பிட்டால், சுடு நீரில் அரை எலுமிச்சை பிழிந்து சாப்பிட விரைவில் ஜீரணமாகி விடும். கொழுப்புச் சத்து உடலில் சேராது.

உடல் பருமன் குறைய

சைக்கிள் ஓட்ட தொப்பை கரையும், உரல் குத்துதல்(10 முதல் 30 நிமிஷம்) மூலம் பெண்கள் தங்களது உடல் எடையை குறைக்க முடியும்.

உப்பு இல்லாமல் சாப்பிடும்போது ஒரு வாரத்துக்கு கஷ்டமாக இருக்கும். நாக்கு அதன் பிறகு எளிதில் பழகிக் கொள்ளும். சாப்பிடும் முறை காரணமாக சாதுக்களுக்கு தொப்பை ஏற்படுவதில்லை.


உணவை எப்படி சாப்பிட வேண்டும்?

உருளைக்கிழங்கு 100 கிராம் வேக வைத்துச் சாப்பிட 75 கலோரி மட்டுமே கிடைக்கும். அதையே வறுத்து பொரித்துச் சாப்பிடும் நிலையில் 300 கலோரி கிடைக்கும். அதாவது 400 கிராம் உருளைக்கிழங்கு சாப்பிட்டதற்குச் சமமாகி விடும். உணவு வகைகளைப் பொரிக்காமல் வேக வைத்துச் சாப்பிட வேண்டும்.

உடல் எடையை குறைக்கும் புரதம்:

தானியங்களான பாசிப் பயறு, சுண்டல், கேழ்வரகு, பட்டாணி 100 கிராமுக்கு வேக வைத்துச் சாப்பிட, 100 சதவீத புரதச் சத்து கிடைக்கும். அவற்றையே முளை கட்டிச் சாப்பிடும் நிலையில், 100 கிராம் பாசிப் பயறுக்கு 800 கிராம் புரதச் சத்து கிடைக்கும். அதிக புரதம் உடல் எடையைக் குறைக்கும்.

உடல் எடையை கூட்டுவதில் தொலைக்காட்சியின் பங்கு:

இனிப்பு வகைகளில் கருப்பட்டியால் செய்த இனிப்புகள் உடலுக்கு நல்லது. குழற்தைகளுக்கு காலையில் சுத்தமான காபி, டீ, பால் கொடுத்தாலே நன்கு பசி எடுத்துச் சாப்பிடுவார்கள். பில்டர் காபி தவிர மற்ற காபி வகைகள் குடல் உறிஞ்சிகளில் ஒட்டிக் கொண்டு பசி எடுக்க காலதாமதம் ஆகிறது. நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் தொடர்ந்து டி.வி. பார்த்தாலே ஒரு ஆண்டுக்கு 5 கிலோகிராம் உடல் எடை கூடுகிறது.

இரவு உணவை 7 மணிக்குள் சாப்பிட்டு விட்டு, அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் எழுந்தால் நன்கு பசி எடுக்கும்.


ஓல்லி, குண்டுக்கு காரணம்:-

ஓல்லியாக இருப்பவர் எவ்வளவு உண்டாலும் உடலின் எடை கூட மாட்டார். இதற்கு தீஷாக்கினியே காரணம்.

ஒரு சிலர் சிறிதளவுதான் உண்பர். ஆனால் உடல் எடை குறையாமல் கூடும். இதற்கு நன்கு உழைத்து பசி எடுத்த பின் சாப்பிட சரியாகும்.

மந்தாக்கினி உணவுகள்:

அசைவ உணவுகள், மைதாவில் செய்த உணவுகள், நெய், சர்க்கரையால் செய்த இனிப்புகள் போன்ற இன்னும் பல மந்தாக்கினி உணவு வகைகளைச் சேர்ந்தவையாகும்.

தீஷாக்கினி உணவுகள்:

அதிக மசாலான உணவுகள், கார உணவுகள், பொரித்த உணவுகள், ஊறுகாய் போன்றவை தீஷாக்கினி உணவு வகைகளைச் சேர்ந்தவை.

விஷமாக்கினி உணவுகள்:

நேரம் தவறி சாப்பிடுதல், பழைய உணவுகள், வண்ணப்பொடி போட்டு செய்த உணவுப் பண்டங்கள் போன்றவை விஷமாக்கினி உணவு வகையைச் சேர்ந்தவையாகும்

அக்கினியை இயல்பாக வைக்க….

உடற்பயிற்சி, நடைப் பயிற்சி, பதற்றம் இல்லாமல் மனதை வைத்துக் கொள்ளுதல் ஆகியவை உடல் அக்கினியை அதிகரித்து இயல்பு நிலையில் வைத்திருக்க செய்யும்.

ஒரு நேரத்தில் ஒரு விதமான உணவு மட்டும் உண்ண வயிற்றில் உள்ள அக்கினி சிரமம் இல்லாமல் எளிதில் ஜீரணமாகும். உதாரணம இட்லி, சாதம் போன்றவையாகும். கல்யாண விருந்து சமயங்களில், பலதரப்பட்ட உணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிடுவதால், வயிற்றில் உள்ள அக்கினி மாறுபாடு அடைந்து ஜீரணம் செய்ய முடியாமல் விஷமாக்கினி ஏற்படும்.

உண்ணும் உணவை பதற்றப்படாமல் நிதானமாக சாப்பிட எளிதில் ஜீரணமாகும். ஆனால் மாறுபாட்டால் உணவு விரைவில் ஜீரணமாவது தடைபடுவதுடன் சத்துகளும் உடலில் சேராது.


உடல் எடையை குறைக்கும் சித்த மருந்துகள்:

சித்த மருத்துவத்தில் திரிகடுகு, கந்தகற்பம், அயசெந்தூரம், சிலாசத்து பற்பம், வெடி அன்னபேதி செந்தூரம், நிலவேம்புகுடிநீர், நவக்குக்குலு, முளைகட்டிய புரதமாவுக்கள் ஆகியவை உடல் பருமனை எளிதில் குறைக்க உதவும்.

வெந்தயம் சாப்பிட்டா உடல் எடை குறையுமா?? | Weight loss using Fenugreek seeds in Tamil

சூடான தண்ணீர் குடிச்சா இவ்ளோ நல்லது நடக்குமா??? | Health benefits of hot water in Tamil

 

 2,805 total views

Weight loss with Ginger in Tamil | உடல் பருமனை குறைக்கும் இஞ்சி 

Weight loss with Ginger in Tamil | உடல் பருமனை குறைக்கும் இஞ்சி

உடல் பருமனாக உள்ளதே என்று நீங்கள் கவலைப்பட்டால், அந்தக் கவலை இனி உங்களுக்கு வேண்டாம்.

இஞ்சி பிரியர் ஆக நீங்கள் இருந்தால், இந்த கவலை உங்களுக்கு இல்லை.
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட, வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
இஞ்சி துவையல், பச்சடி செய்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
இஞ்சி சாற்றில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

இஞ்சி பயன்படுத்தும் முறை:-

 1.  இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
 2.  இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
 3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
 4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
 5.  இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
 6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
 7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
 8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
 9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.
 10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.
 11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.
 12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.
 13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.
 14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
 15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
 16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும். எடை குறைக்கக் கூடிய பல வழிகள் எமது CHANNEL- யில் உள்ளது. அதை பார்க்க  CLICK செய்து SUBSCRIBE செய்யவும்.
https://www.youtube.com/c/pallanduvazhga
இன்னும் பல தகவல்களை விரிவாக பெற எமது WEBSITE பக்கத்தை CLICK செய்யவும்.

 6,884 total views