உடல் பருமன் குறைக்க, இந்த 3 டிப்ஸ் –ல் 1 முயற்சி செஞ்சு பாருங்க போதும்

உடல் பருமன் குறைக்க, இந்த மூன்று டிப்ஸ்ல் ஒன்று முயற்சி செஞ்சு பாருங்க போதும்

                               உடல் பருமன் குறைக்க

நிவாரணங்கள்:

1. தக்காளிச் சாறு & எலுமிச்சைப் பழச்சாறு இவைகளிலுள்ள வைட்டமின் சி தோலை இளமையாக வைத்து, உடல் பருமனும் குறைந்து விடும்.

2. 100 கிராம் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேன் விட்டு பருகி வரலாம் அல்லது எலுமிச்சம் பழச்சாறு 50 கிராம் சேர்த்து பருகி வர உடல்பருமன் குறையும்.

3. ஆமணக்கின் வேரை நன்றாக நைய இடித்து தேன் கூட்டிப் பிசைந்து 250 மிலி தண்ணீரில் ஊற வைத்து, ஒரு நாள் முழுவதும் ஊறியதும் கசக்கிப் பிழிந்து சக்கைகளை களைந்து காலையில் வெறும் வயிற்றில் பருக உடல் பருமன் குறையும்.



 4,833 total views,  15 views today

Weight loss Recipes in Tamil | எடை குறைக்க உதவும் சாதம்

Weight loss Recipes in Tamil | எடை குறைக்க உதவும் கொள்ளு சாதம் கறிவேப்பிலை சாதம்

This page explained that how to do gram rice and curry leaves rice for weight loss process.

சுவையான கொள்ளு சாதம்:-

தேவையான பொருட்கள்:-

இளவறுப்பாக வறுத்த கொள்ளு பொடி – 1/2 கப்

தேங்காய் துருவல் – 1/2 கப்

அவல் (ஊறவைத்தது) – 1 கப்

சாதம் – 1 கப்

எலுமிச்சை பழச்சாறு – 1 தேக்கரண்டி

மிளகு பொடி – 1/2 தேக்கரண்டி

சீரகப் பொடி – 1 தேக்கரண்டி

செய்முறை:-

தேங்காய் துருவல், உப்பு, மிளகு, சீராக பொடி, எலுமிச்சை பழச்சாறு சேர்த்து மிக்ஸியில் அரைத்து பின்பு அந்த கலவையுடன் கொள்ளு பொடி சேர்க்கவும். இந்த மொத்த கலவையுடன் ஊறவைத்த அவல் சேர்த்து கிளர கொள்ளுசாதம் தயார்.

கொள்ளு சாதம்

குறிப்பு:-

அவல் தேவைபட்டால் லேசாக வேக வைக்கலாம். தேங்காய் துருவல் அதிகம் சேர்க்க வேண்டாம். மிகவும் குறைவான அளவு பயன்படுத்தவும். அவலுக்கு பதில் சாதம் கூட பயன்படுத்தலாம்.

பயன்கள்:-

முதல் முக்கிய பயன் உடல் பருமன் குறையும். சிறுநீர் பாதை அடைப்பு சரியாகும். பெண்களுக்கு முக்கியமாக வெள்ளைபடுதல் பிரச்சனை சரியாகும். மாதந்திர ஒழுக்கு பிரச்னை கட்டுப்பட்டு விரைவில் ஒழுங்காகும். ஜலதோஷம், வயிற்றுப்பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றை குணப்படுத்தும். அதே போல உடல் பலவீனத்தை தணிக்க வல்லது.

கொள்ளு பொடியின் கூடுதல் பயன்கள்:-

  • உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கிய இடமுண்டு.
  • மிக அதிகமான புரதம் கொண்ட பருப்பு வகை கொள்ளு. அதிக இரும்புச்சத்து மற்றும் கால்சியம் பாஸ்பரஸ், குறைவான கொழுப்பு மற்றும் சோடியம் கொண்டது.
  • கொள்ளு வேக வைத்த தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிக்கும், நச்சுத் தன்மையை போக்கும்.
  • வளரும் குழந்தைகள் மற்றும் உடல் பயிற்சி செய்பவர்களுக்கு உகந்தது.
  • நீரழிவு மற்றும் உடல் பருமன் உடையவர்களுக்கு ஏற்ற உணவு.
  • மூல நோய், ருமாட்டிசம், அல்சர் சிறுநீரகக் கற்கள், அதீத ரத்தப் போக்கு, இருமல், சளி, காய்ச்சல், ஆஸ்துமா ஆகியவற்றுக்கு சிறந்த மருந்து கொள்ளு.
  • கொள்ளில் உள்ள நார் சத்து மலச்சிக்கலுக்கு நிவாரணம் மற்றும் குடல் இயக்கத்தை எளிதாக்க உதவுகிறது.
  • கொள்ளில் உள்ள கால்சியம் , பாஸ்பரஸ், இரும்பு, மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற சத்துக்கள் விந்து உற்பத்தியை ஊக்குவிக்கின்றன.
  • அதிக/குறைவான இரத்தப்போக்கு அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை கொள்ளில் உள்ள இரும்புசத்து சரி செய்கிறது.



சுவையான கருவேப்பிலை சாதம்:-

கறிவேப்பிலை சாதம் செய்ய தேவையான பொருட்கள்:-

கறிவேப்பிலை (நறுக்கியது) – 1/2 கப்

அவல் (ஊரவைத்தது) – 1 கப்

தேங்காய் துருவல் – 1/2 கப்

சீரகப் பொடி – 1 1/2 தேக்கரண்டி

எலுமிச்சை பழச்சாறு – 3 தேக்கரண்டி

உப்பு – தேவைகேற்ப

மிளகு பொடி – 1 1/2 தேக்கரண்டி

இஞ்சி (நறுக்கியது) -2 தேக்கரண்டி

செய்முறை:-

கறிவேப்பிலை, உப்பு, மிளகு, சீரக பொடி, இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்து கொள்ளவும். பின் அந்த கலவையை அவலுடன் சேர்த்து கிளர சாதம் தயார்.

கறிவேப்பிலை சாதம்

குறிப்பு:-

அவல் தேவைபட்டால் லேசாக வேக வைக்கலாம். தேங்காய் துருவல் அதிகம் சேர்க்க வேண்டாம். மிகவும் குறைவான அளவு பயன்படுத்தவும். அவலுக்கு பதில் சாதம் கூட பயன்படுத்தலாம்.

கறிவேப்பிலையின் கூடுதல் பயன்கள்:-

1) இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது.

2) வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது.

3) குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வு.

4) சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.

5) வேதிச்சிகிச்சையால் ஏற்படும் (கீமோதெரபி) பக்க விளைவுகளைக் குறைக்கிறது.

6) தோலில் ஏற்படும் நோய்த் தொற்றினைக் குணப்படுத்துகிறது.

7) கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது.

8) கல்லீரலைப் பாதுகாக்கிறது.

9) கெட்டக் கொழுப்பினைக் குறைக்கிறது.

10) முடியை வலுவாக்குகிறது.

11) நீரிழிவு நோய்க்குத் தீர்வு கிடைக்கிறது.

12) செரிமான மண்டலத்திற்கு நல்லது.

 1,608 total views