கர்ப்பக் கால பிரச்சனைகளுக்கான எளிய தீர்வுகள் | Tips for a Healthy Pregnancy in Tamil

கர்ப்பக் கால பிரச்சனை:

https://www.youtube.com/watch?v=RRrG0V5h-OM&t=16s

வாந்தி [குமட்டல்] :-

 •  சாப்பாட்டிற்கு முன் 2 கி. ஏலரிசிப் பொடியை தேவையான எலுமிச்சம் பழச்சாற்றில் குழைத்து தொடர்ச்சியாக ஒரு சில நாட்கள் உட்கொண்டு வர கர்ப்ப காலத்தில் ஏற்படும் அஜீரணம் குமட்டல், வாந்தி தடுக்கலாம்.
 •  சுத்தமான நல்லெண்ணை சிறிதளவு பூப்பெய்தும் இளம் பெண்களுக்கு கொடுப்பார்கள். இவ்வாறு செய்தால் கருமுட்டை உற்பத்தி உறுப்புகள் சீராக செயல்படுகிறது. கருப்பையில் அழுக்கை அகற்றும் பணியையும் நல்லெண்ணெய் செய்கிறது.
 •  இளம் தென்னம்பூ வெயிலில் காய வைத்து தூளாக்கி காலை, மாலை 2 தேக்கரண்டி அளவு உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு ஆகியன குணமாகும்.
 •  தென்னம்பாலை இளசாகக் கொண்டு வந்து இடித்து சாறாக்கி அத்துடன் பசும்பால் சேர்த்து அருந்தி வர பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல் பெரும்பாடு ஆகியன குணமாகும்.
 •  மாவிலிங்கப்பட்டை அல்லது இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து குடித்து வர சுரம், வெள்ளை, வெட்டை, கல்லடைப்பு, சூதகப்பட்டு மற்றும் உடலில் ஏற்படும் குத்தல், குடைச்சல் குணமாகும். 2,073 total views,  3 views today

Bubble Gum அசைபோடும் பழக்கம் உள்ளவரா நீங்கள் – அசைபோடுவதும் ஆரோக்கியமே!

அசைபோடுவதும் ஆரோக்கியமே!
ஓட்டகத்தைவிட, அதிகமாக அசைபோடும் இளசுகளுக்காகவே, பலவித வண்ணங்கள் , சுவை, மணங்களில் சுயிங்கம்கள் கிடைக்கின்றன.

ஓய்வுநேரத்தில் சுயிங்கம் மெல்லுவது என்பது நிறையப் பேருக்கு பழக்கமாகவே மாறிவிட்ட நிலையில் இசுயிங்கம் மெல்லுவதால் வரும் நன்மைகள், பாதிப்புகள் குறித்து கோவையைச் சேர்ந்த வயிறு மற்றும் குடல்நலச் சிறப்பு மருத்துவரிடம் கேட்டோம்.“ நாம் அதிகம் பயன்படுத்தும் சுயிங்கம்கள் சர்க்கரையைப் பயன்படுத்தித் தயரிக்கப்படுகிறது. இது எல்லாக் கடைகளிலும் கிடைக்கும் சாதாரணவகை, மற்றொன்று, செயற்கைச் சர்க்கரையைக் கொண்டுதயாரிக்கப்படும் ‘சுகர் ஃப்ரீசுயிங்கம்’.
ஆரோக்கியத்தைக் கவனத்தில் கொண்டு, தற்போது மார்கெட்டில், புதுமையாக ‘சுகர்ஃப்ரீ’ இனிப்புகளைப் போல, இந்த ‘சுகர் ஃப்ரீசுயிங்கம்கள்’ வந்துவிட்டன.

சுகர் ஃப்ரீசுயிங்கம் மெல்லுவதன் மூலம் நன்மைகளும் உண்டு. சுயிங்கம் மெல்லும்போது நம்முடைய மூளையில் நினைவாற்றலுக்குப் பொறுப்பான பகுதி தூண்டப்படுகிறது என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. மேலும் மனஅழுத்தம் பதற்றத்தைப் போக்குகிறது. மனஅழுத்தம், பதற்றமான சூழ்நிலையில் ஒருசுயிங்கம் மெல்லும் போது அதுமனதை அமைதிப்படுத்துகிறது” என்கிற டாக்டர், சுயிங்கம் பற்றிமேலும் விரிவாகப் பேசினார்.

“சுயிங்கம் மெல்வது செரிமானத்துக்கும் உதவியாக இருக்கிறது. குறிப்பாக சாப்பிட்டதற்குப் பிறகு சுயிங்கம் மெல்வது மிகவும் நல்லது. இப்படிச் செய்யும்போது அதிக அளவில் எச்சில் சுரக்கப்பட்டு இரைப்பைக்குள் அனுப்பப்படுகிறது. இது வயிற்றில் உள்ள அமிலங்களைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், புளித்தஏப்பம் பிரச்னை உள்ளவர்கள், இதனை மெல்லும் போது உருவாகும் உமிழ் நீர், அமிலகாரத் தன்மையைச்சீர் செய்கிறது.உணவு உண்டபின் இதனை மெல்லுவதன் மூலம், பல் இடுக்குகளில் உள்ள உணவுத் துகள்கள் வெளியேற்றப்படும். இதனால், உணவுக்குப் பின் பல் தேய்ப்பது, மவுத் வாஷ் உபயோகிப்பது போன்றவற்றுக்கு அவசியமே இருக்காது. இது பல் மற்றும் தாடைகளுக்கு நல்லதொரு பயிற்சியாகவும் அமைகிறது.
வாய் துர்நாற்றம் இருப்பவர்கள், இந்த சுயிங்கத்தை மெல்லுவதன் மூலம், சுவாசப் புத்துணர்ச்சிகிடைக்கும். ‘ஜிராக்ஸ்டோமியா’எனப்படும்.

இயற்கையாகவே விழிநீர், உமிழ் நீர் சுரப்பு, குறைவாக உள்ள குறைபாடு உள்ளவர்கள், இந்தச் செயற்கைச் சர்க்கரை சுயிங்கம்களை மெல்லுவதன் மூலம், அதிலிருந்து மீள முடியும் “ என்றவர் சுயிங்கம் மெல்வதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பட்டியலிட்டார்.

“சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் சுயிங்கம்களை தொடர்ந்து மெல்லுவதன் மூலம், பற்சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. காரணம், அதில் உள்ளசர்க்கரை. பல் இடுக்குகளில் படிந்துள்ள பாக்டீரியாக்களுக்கு உணவாகிவிடுவதால், அவை வேகமாக வளர்ந்து பற்களைச் சிதைக்கும். இதனால் சிறுவர்கள், சிறுவயதிலேயே பல சம்பந்தப்பட்டபாதிப்புகளுக்கு ஆளாகலாம்.
மற்றொருபிரச்னை, சுயிங்கம்மைத் தெரியாமல் விழுங்கிவிடுவது, சுயிங்கம்மை விழுங்கினாலும் பாதிப்புகள் பெரியஅளவில் இருக்காது.

காரணம் இது உடலுக்குள் எங்கும் ஒட்டாமல் நமது குடலை அடைந்துவிட்டால், மிக எளிதாக மலத்தில் வெளியேறிவிடும். மாறாக இது உணவுக்குழாயில் ஒட்டிக்கொள்ளும் போதுதான், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும். சுயிங்கம்மைத் தெரியாமல் விழுங்கிவிட்டால், உடனடியாக அதிகப்படியான நீர் அருந்த வேண்டும். இது, சூவிங்கம் குடலை அடைந்து வெளியேறிவிடுவதற்காண வாய்ப்பை அதிகரிக்கிறது. இல்லையெனில் அறுவை சிகிச்சை மூலமே வெளியேற்ற இயலும்.
சுயிங்கம் பிரியர்கள் சுகர் ஃப்ரீசுயிங்கம் மெல்லுவதால், முகத்துக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்”

அசைபோடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்

 2,904 total views,  3 views today

சிறிது குடிப்பழக்கம் இருந்தாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்

சிறிது குடிப்பழக்கம் இருந்தாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்

மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால் அது கல்லீரலை பாதித்து விடும். இதன் காரணமாக கல்லீரல் செல்கள் நலிந்து கல்லீரல் இறுக்கி நோய் ஏற்பட்டுவிடும்.

அதிகமாக மதுவைக் குடிக்கும்போது அது முதலில் கல்லீரல் கொழுப்புகளைப் படிய வைக்கும். அந்த நிலையில் மதுவை நிறுத்தினால் கூட ஓரளவு குணம் கிடைக்கும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால் அதற்குப் பிறகும் தொடர்ந்து குடிக்கும்போது அது கல்லீரலைப் பெரிதும் பாதித்து கல்லீரல் இறுக்கி நோயை ஏற்படுத்தி விடக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்.

பொதுவாக, கிருமிகள் கல்லீரலை பாதித்து சுழற்சியை ஏற்படுத்தும் போது அவர்களுக்கு நோய் ஏற்படும்.

மஞ்சள்காமாலை ஏற்பட்டவுடன் அது எந்தக் காரணத்தினால் ஏற்பட்டது என்பதைக் கண்டறிய வேண்டும்.

ஏனெனில் பல்வேறு காரணங்களினால் மஞ்சள் காமாலை ஏற்படும். அதே நேரம் வைரஸ் கிருமிகளின் காரணமாக மஞ்சள் காமாலை ஏற்பட்டால் அது எந்த வைரஸினால் உண்டானது என்று கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

‘பி’ மற்றும் ‘சி’ வகை வைரஸினால் பாதிப்பு என்றால் இவர்களுக்கு கல்லீரல் இறுக்கி நோய் வர அதிக வாய்ப்பு உண்டு. அதனால் இவர்கள் அடிக்கடி பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் இவர்களுக்கு கல்லீரல் இறுக்கி நோய் மட்டுமல்லாமல் அது கல்லீரல் புற்று நோயாகவும் மாறிவிடக்கூடும் என்றும் கூறுகின்றனர்.
மேலும் பல தகவல்கள் எமது இணையதளத்தில் உள்ளது.

 3,000 total views

காய்கறிகளும் உங்களை அழகாக்க உதவும் | Beauty tips using Vegetables in Tamil

காய்கறிகளும் உங்களை அழகாக்க உதவும் | Beauty tips using Vegetables in Tamil

காய்கறிகளும் பயன்களும்

சமையலறை என்பது சமைப்பதற்கான அறை மட்டுமல்ல, உங்களை அழகாக்கும் மந்திர அறையும் அதுதான். வெயில், புகை, தூசு என தினம் தினம் உங்கள் முகத்தைப் பதம்பார்க்கும் விஷயங்கள் ஏராளம்.அவற்றில் இருந்து தப்பித்து உங்களது சருமத்தை மாசு, மருவில்லாமல் ஆரோக்கியத்துடன் வைக்க உதவும் பொருட்கள் உங்கள் வீட்டு சமையலறைக் குள்ளேயே ஒளிந்திருக்கின்றன.

முகத்தின் தன்மையைப் பொறுத்து அதை வறண்ட சருமம், எண்ணெய் சருமம், சாதாரண சருமம் என மூன்று விதமாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு சருமத்துக்கென பிரத்யேக குணங்கள் இருக்கும் என்பதால் அதற்கேற்ற மாதிரிதான் பராமரிப்பும் இருக்க வேண்டும். ஒரு சருமத்துக்கு ஒத்துக்கொள்வது இன்னொரு வகை சருமத்துக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

குறிப்பு 1:-

வறண்ட சருமத்தை வழவழப்பு சருமமாக மாற்ற இரண்டு பிஞ்சு வெண்டைக்காய், ஒரு சின்ன கேரட், சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டு விழுதுபோல நைஸாக அரைக்கவும். இதை முகத்தில் பேக் போல போட்டு அரை மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் மெருகேறும்.இதை வாரம் இருமுறை என இரண்டு வாரங்கள் போட்டுவந்தால் முகம் பளபளக்கும்.


குறிப்பு 2:-

கண்களுக்குக் கீழே கருவளையம் இருப்பவர்கள் அகத்திக்கீரையை சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டு அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தால் தோல் பிரச்சினைகள் இருக்காது. அதோடு கருவளையமும் காணாமல்போகும். மேல் உதடு ஒரு நிறமாகவும், கீழ் உதடு ஒரு நிறமாகவும் இருப்பவர்கள் சீமை, அகத்திக்கீரை, பச்சைப் பயறு சேர்த்து அரைத்துத் தடவினால் உதடுகளின் நிறம் ஒரே மாதிரியாக மாறிவிடும்.

குறிப்பு 3:-

வறண்ட சருமம் இருப்பவர்கள் புளிப்புத் தன்மையுள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது. தினமும் பாதாம், முந்திரி, வேர்க்கடலை என மூன்று வேளையும் ஏதாவது ஒருவேளைக்கு இரண்டு என சாப்பிட்டுவர, உடலின் பல பிரச்சினைகள் தீரும். கீரை வகைகள் மற்றும் பழங்களை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பு 4:-

எண்ணெய்ப் பசை கொண்ட சருமத்துக்கு முல்தானிமெட்டியுடன் சிறிதளவு பன்னீர் கலந்து முகத்தில் தடவலாம். பாதாம், பருப்பை கஸ்தூரி மஞ்சளுடன் சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை தடவி வந்தால் முகத்தில் எண்ணெய் வழியாது.

குறிப்பு 5:-

தக்காளிச்சாறு, வெள்ளரிக்காய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து, வேகவைத்து ஆறியதும் சிறிதளவு தயிர் கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் எண்ணெய்ப் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.


குறிப்பு 6:-

சாதாரண சருமத்துக்கென பிரத்யேகமாக எதுவும் செய்யத் தேவையில்லை. எப்போதும் போல முகத்தைப் பராமரித்து வந்தால் போதும். கன்னங்கள் ஒட்டிப்போய் இருப்பவர்கள், சாமந்திப் பூ சிறு பருப்பு சேர்த்து அரைத்து முகத்தில் தடவினால் கன்னங்கள் உப்பி வரும்.

உதடு வெடிப்புக்கு…

வெந்தயம் சாப்பிட்டா உடல் எடை குறையுமா?? | Weight loss using Fenugreek seeds in Tamil

 

 2,196 total views

Health Benefits of Apples in Tamil | ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் இவ்ளோ நன்மைகளா!!

தற்போது அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய மிகவும் பிரபலமான மற்றும் பலரும் விரும்பி சாப்பிடும் பழம் தான் ஆப்பிள். ஆப்பிளில் பல வெரைட்டிகள் உள்ளன. அனைத்து வகையான ஆப்பிள்களும் ஒரே சத்துக்களைத் தான் கொண்டுள்ளது. ஒருவர் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. அந்த அளவில் ஆப்பிளில் ஏராளமான சக்தி வாய்ந்த உட்பொருட்கள் அடங்கியுள்ளன. அதில் ப்ளேவோனாய்டு, பாலிஃபீனால்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், பொட்டாசியம், பாஸ்பர், கால்சியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த ஆப்பிளை எப்போது சாப்பிடுவது சிறந்தது. ஆப்பிளை எப்போது சாப்பிட்டாலும், அதன் நன்மைகள் கிடைக்கும்.

 • ஆப்பிள் இரவு நேரத்தில் சாப்பிட ஏற்ற ஒரு அற்புதமான உணவுப் பொருள். இதில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் நல்ல கனவைப் பெற உதவும் கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாகவும், சிறிதளவு கொழுப்பு கூட இல்லை. ஆகவே இரவில் உங்களுக்கு திடீரென்று பசி எடுத்தால், ஆப்பிள் சாப்பிடுவது மிகவும் நல்லது.
 • ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவும். ஆப்பிளை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், குடலியக்கம் சிறப்பாக நடைபெற்று, மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் கழிவுகளை எளிதில் மலக்குடல் வழியாக வெளியேற்றும்.
 • எனவே உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள்.
 • புற்றுநோயைத் தடுக்கும் ஆப்பிள் புற்றுநோயைத் தடுக்கும். குறிப்பாக ஆப்பிள் மார்பக புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய் போன்றவற்றின் அபாயத்தைத் தடுக்கும்.
 • உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாது என்று நினைத்தால், தினமும் ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிடுங்கள். ஏனெனில் தோலில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.
 • யார் ஒருவர் நோய்வாய்ப் பட்டுள்ளார்களோ, அவர்கள் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், விரைவில் உடலுக்கு ஆற்றல் கிடைத்து, சோர்வின்றி புத்துணர்ச்சியுடன் இருப்பர்.
 • உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் அன்றாடம் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
 • இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டியது அவசியம்.

ஆப்பிளின் தோலில் உள்ள சக்தி வாய்ந்த ப்ளேவோனாய்டான க்யூயர்சிடின், இரத்த நாளங்களில் உள்ள அழற்சியைக் குறைக்கும். சுவாச பிரச்சனைகளைப் போக்கும் இன்று ஏராளமானோர் சுவாச பிரச்சனைகளால் அவஸ்தைப்படுகிறார்கள். குறிப்பாக ஆஸ்துமாவினால் கஷ்டப்படுகிறார்கள்.

 • ஆனால் ஆப்பிளை ஒருவர் தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், அதில உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், மூச்சுக்குழாய்களில் உள்ள அழற்சியைக் குறைத்து, சுவாச பிரச்சனைகள் வருவதைத் தடுக்கும்.
 • உங்களுக்கு முதுமையில் இம்மாதிரியான கொடுமை நடைபெறக்கூடாது என்றால், தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுங்கள்.தூங்கும் முன் ஆப்பிள் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? தூங்கும் முன் ஒரு ஆப்பிள் அல்லது ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிட்டால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடையைக் குறைக்கலாம் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

இது உண்மையா?

 • ஊட்டச்சத்து நிபுணரான அமாண்டா, இரவில் படுக்கும் முன் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம். ஏனெனில் ஆப்பிளில் பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. அதோடு ஆப்பிளில் உள்ள இயற்கை சர்க்கரை, இரத்த சர்க்கரை அளவை மெதுவாக அதிகரிக்கும்.
 • அதோடு ஆப்பிளில் கலோரிகளும் மிகவும் குறைவு. இரவில் சாப்பிடும் கலோரிகள் உடலில் கொழுப்புக்களாக மாறும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அது முற்றிலும் தவறு.
 • கலோரிகள் எப்போது கொழுப்புக்களாக மாறும் என்பது தெரியுமா? ஒருவரது உடலில் கலோரிகளானது கொழுப்புக்களாக மாறுவதற்கு ஒரு நாள் ஆகும். எனவே கலோரிகள் எப்போதுமே நாம் உட்கொண்ட உடனேயே கொழுப்புக்களாக மாறாது என்றும் அமாண்டா கூறுகிறார்.

உண்மையான காரணம் என்ன?

 • ஆப்பிளை இரவில் தூங்கும் முன் சாப்பிடுவது நல்ல என்று கூறுவதன் உண்மையான காரணம், இரவில் பசி எடுத்தால், அப்போது பிஸ்கட் அல்லது இதர பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டால், அதில் கார்போஹைட்ரேட்டுகள் இருக்கும். அதுவே பசியின் போது ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமும் மேம்படும், கலோரிகள் அல்லது கார்போஹைட்ரேட்டுகள் எதுவும் இருக்காது.
 • மேலும் இரவு நேரத்தில் உடலுக்கு ஆற்றலே தேவையில்லை. எனவே இரவில் பசிக்கும் போது கண்ட பழங்களுக்கு பதிலாக, ஒரு ஆப்பிளை சாப்பிடுங்கள், நிச்சயம் எவ்வித பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது.

 1,575 total views