இவரை போன்று அழகான கன்னம் பெற 9 எளிய டிப்ஸ் | How to get chubby cheeks in Tamil

அழகான கன்னம் பெற | How to get chubby cheeks in Tamil

முகத்தில் அழகை இன்னும் அழகாக்குனது களையான கன்னங்கள். ஆப்பிள் போல் கன்னங்கள் இருந்துவிட்டால் அழகோ அழகு.

ஆப்பிள் கன்னங்கள் பெறுவதற்கு இதோ சில டிப்ஸ்.

  1. உடலுக்குத் தேவையான எண்ணெய் பசை இல்லாத போது கன்னப் பகுதியும் வறண்டு போய் காணப்படும். வறண்ட சருமம் உள்ளவர்கள் தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப் பருப்பு, முந்திரிப் பருப்பு இவற்றை தலா ஒன்று எடுத்து வெந்நீரில் ஊறவைத்து அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசிவிட்டு மீதி மூன்று பருப்பையும் சாப்பிட வேண்டும். தோலில் எண்ணெய் பசை சுரப்பதற்கு இந்த பருப்பு வகைகள் உதவும். இதனால் முகச் சுருக்கங்கள் மறைவதுடன், ஒடுங்கிய தாடைப்பகுதியில் சதை போட்டு கன்னம் தங்கம் போல் மின்னும்.
  2. மூன்று ஆப்பிள் துண்டுகள், மூன்று கேரட் துண்டுகள் இவற்றை துருவி ஜீஸ் செய்து, அதனுடன் அரை எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கன்னத்தில் சதை போட்டு, கன்னத்தில் நிறம் கூடி பளப்பாகும்.
  3. ஒரு கப் பாலில் ஒரு ஸ்பூன் வெண்ணெய், ஒரு ஸ்பூன் தேன், இரண்டு துண்டு சீஸ், ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து தினமும் காலையில் சாப்பிடுவதுடன், ஒரு கப் ஆரஞ்சு அல்லது ஆப்பிள் ஜீஸ் குடித்து வந்தாலே போதும். சதைப்பிடிப்புடன் அழகான கன்னம் பெறலாம்.
  4. அன்றாட உணவில் பால், சீஸ் மற்றும் நீர்ச்சத்தான ஆகாரங்களை உண்ணாததும் கன்னம் ஒட்டிப் போவதற்கு ஒரு காரணம், இதனால் சருமம் வறண்டு, உதடுகளும் வெடிப்புக்கு உள்ளாகும். தினமும் உணவில் பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகளையும், உலர்ந்த பழங்களையும் உடலுக்குத் தேவையான நீரையும் உட்கொண்டால் கன்னங்கள் செழுமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
  5. தினமும் குளிப்பதற்கு முன்பு ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன் சிறிது சர்க்கரை கலந்து கன்னங்களில் தேய்த்து வர கன்னங்கள் உப்பி ஆரம்பிக்கும்.
  6. நல்லெண்ணெய் அல்லது தேன் ஒரு கரண்டி எடுத்து, வாயில் போட்டு கொப்பளிக்கவேண்டும். இது ஒட்டிய கன்னம் உள்ளவர்களுக்கு சிறந்த பயிற்சியாகும்.
  7. ஆப்பிளை நறுக்கி அரைத்து அவற்றை முகம் முழுவதும் பூசி பேசியல் ஸ்ட்ரோக் கொடுத்து வர ஒரே வாரத்தில் அழகான கன்னங்கள் பெறலாம்.
  8. ஒரு ஸ்பூன் தேனுடன் அரைத்த பாதாம் விழுது, ஒரு ஸ்பூன் சேர்த்து குழைத்து முகத்திற்கு, பேக் போட்டு அரை மணி நேர ஊறவைத்து பின்பு கழுவ கன்னம் பளபளப்பாகும்.
  9. பால் 1 ஸ்பூன், வெண்ணெய் 1 ஸ்பூன், பார்லி தூள் 1 ஸ்ப10ன் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு நுரை வரும் வரை கலக்கவும். அப்போது கிடைக்கும் கிரீமை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்தால், முகம் மென்மையாகவும், பளபளப்பாகவும் மினுமினுப்பாகவும் பிரகாசிக்கவும். 4,116 total views,  3 views today