மலட்டுத் தன்மை( ஆண், பெண், பொது ) | Infertility

மலட்டுத் தன்மை( ஆண், பெண், பொது )

ஆண் மலட்டுத் தன்மை நீங்க:-

 • பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும், நீர் வேட்கையும் நீங்குவதுடன் ஆண்மை அதிகரிக்கும்.
 • சுரைக்காயை சமையலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தத்தைப் போக்கும் குணமுடையது. இதன் விதைகள் ஆண்மையைப் பெருக்கும்.
 • ஆலமரத்தின் மொக்கு,தளிர் இலை, விழுதும், விதை இவற்றில் ஏதேனும் ஒன்றை அரைத்து அதை பாலில் கலந்து சர்க்கரையும் சேர்த்து குடித்து வர ஆண்மை அதிகரிக்கும்.
 • அரச விதையை பாலில் கலந்து குடித்து வர ஆண்மை அதிகரிக்கும். பெண்ணுக்கும் கரு உற்பத்தி ஆகும்.

பெண் மலட்டுத் தன்மை நீங்க:-

 • தாழம்பூ விழுதை அரைத்து பாலில் கலந்து குடித்து வர மலட்டுத் தன்மை நீங்கும்.
 • பத்து மிளகினை பொடி செய்து அதனுடன் பகால் இலைச் சாறும், கரிசலாங்கண்ணி இலைச்சாறும் கலந்து 40 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வர பெண்களின் மலட்டுத் தன்மை நீங்கும்.மலட்டுத் தன்மை [இருபாலருக்கும் பொது]:-

 • “விட்டதடி ஆசை விளாம்பழத் தோட்டோடு” என்ற பழமொழிக்கு ஏற்ப ஆண், பெண் மலட்டுத் தன்மை நீங்க இருவரும் விளாம் பழத்தையோ, கிடைக்காத பட்சம் அதன் ஓட்டையாவது(மேல் தோல்) கஷாயமாக காய்ச்சி 40 நாட்கள் குடித்து வந்தால் உடலில் உள்ள இரத்தம் சுத்தம் ஆகி குழந்தைப் பேறு உண்டாகும் என்பது அகத்தியர் வாக்கு.
 • தவிர விளாம்பழத்தில் ரத்தத்தில் கலந்துள்ள கெட்ட நோய் அணுக்களை அழிக்கும் திறன் உள்ளது.
 •  அரசமரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாள் என்று பழமொழியும் உண்டு.
 • அரசமரத்தில் சூலகத்தை வலுவாக்கும் அழலையை நீக்கும் பொருள் உள்ளதால் ஆண் & பெண் குளித்த உடன் ஈரத் துணியுடன் சுற்றினால் அரச மரத்திலுள்ள அந்த சத்துகள் ஈர்க்கப்பட்டு குழந்தை உண்டாகும் வாய்ப்பு உள்ளது.
 • மாதுளை வளர்ந்த வீட்டில் களக்கமில்லை என்ற பழமொழி போல ஆண், பொண் இருபாலருக்குமே மலட்டுத் தன்மை நீங்கி விடும். ஆண்களுக்கு விந்துக்களின் எண்ணிக்கை பெருகும்.
 • பெண்கள் மாதுளம்பூ, கஷாயத்துடன் சிறிது வெந்தயம் சேர்த்து தினசரி பருகி வர, கருப்பை உஷ்ணம் & கிருமிகள் நீங்கி விரைவில் கருத்தரிப்பர். ஆண்களும் மாதுளம் பழ விதைகளை ஜூஸ் செய்து சாப்பிட 3 மாதத்தில் விந்தணுக்களின் எண்ணிக்கை வியக்கத்தக்க அளவில் அதிகரித்து குழந்தை பிறக்க வழியேற்படும்.
 • புளிக்காத தென்னங்கள்ளை குடித்து வந்தால் அழகான குழந்தை பிறக்கும்.
 •  பலா பிஞ்சிகளை சமைத்து உண்ண பித்தமும், நீட்வேட்கையும் நீங்குவதுடன் ஆண்மை அதிகரிக்கும்.
 •  அத்திக்காய் வடை:    அத்திக்காயை விதை நீக்கி திட்டமாக தண்ணீர் சேர்த்து வேக வைத்து கரகரப்பாக வடைமாவு பதத்தில் அரைத்து, அதுபோல கடலைப்பருப்பையும் ஊற வைத்து கரகரப்பாக அரைத்து இஞ்சி, நறுக்கிய மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி செடி, உப்பு இவைகளை சேர்த்து வடை பக்குவத்தில் எண்ணெயில் இட்டு சிவக்க பொரித்து எடுத்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சினையை சரிசெய்து மலடும் நீங்கும்.
 • ஆண்களுக்கு உடல் சூட்டை சீர்செய்து விரைவாதம் & மலட்டு தன்மையும் குணமாகும். 1,410 total views,  1 views today