பசி, பசியின்மை இரண்டும் தீர

பசி, பசியின்மை

பசி பசியின்மை பிரச்சனைக்கு கீழே உள்ள வழிமுறையை செஞ்சுப்பாருங்க

 • பசித்தீயைத் தூண்டும் சீரகம், ஓமம், கடுகு, பெருங்காயம், பட்டை, சோம்பு, மிளகு, குண்டு மிளகாய், தனியா, மஞ்சள் போன்றவற்றை உணவில் சீரான சேர்க்கை, வாரம் ஒன்றிரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளித்தால் ஆகியவற்றின் மூலம் உடலுக்கு அமைதியும், சுகமும் உண்டாகும்.
 • வெந்தயம் 1 பங்கு, கோதுமை 8 பங்கு இவற்றை லேசாக வறுத்து இடித்து வைத்துக் கொண்டு தினசரி காலையில் வெறும் வயிற்றில் சிறிது சாப்பிட நல்ல பசி எடுக்கும். மலச்சிக்கல் இருக்காது.
 • ஓமம், சுக்கு, தனியா ஆகியவற்றை நன்றாகப் பொடித்து ஒரு சிட்டிகையளவு பொடியை புழுங்கலரிசிக் கஞ்சியுடன் கலந்து, சாதாரண உப்புக்குப் பதிலாக இந்துப்பு கலந்து வெது வெதுப்பாகக் குடிக்கவும்.
 • இந்த கஞ்சி செரித்த பிறகு பசி எடுத்தால் தான் அடுத்த உணவை சாப்பிட வேண்டும்.
 • அதற்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வெட்டிவர் 15கிராம், 1லி தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு அரை லிட்டராக ஆகும் வரை காய்ச்சி, சூடு ஆறியதும் வடிகட்டிய தண்ணீரில் சிறிது சிறிதாகக் குடிக்க வேண்டும்.
 • இந்த மூலிகை தண்ணீர் உணவை நன்றாக செரிக்க வைத்து, வயிற்றிலுள்ள புண்ணை ஆற்றி, மப்பி நிலை ஏற்படாதவாறு பாதுகாக்கும். 
 • உடல் எடை அதிகரிக்க https://www.youtube.com/watch?v=6IPowp6xRPc&list=PLUWrx5NJ9gFfZule9PJwZa7Q4AZxjoP9V
 • உடல் எடை குறைக்க அருமையான வழிகள் https://www.youtube.com/watch?v=bybxyiLlPQs&list=PLUWrx5NJ9gFdiMzMQkawLZFUxImg9Otzc 1,139 total views,  1 views today

அத்தி பழத்துல இவ்வேளா நல்லது இருக்கா! இது தெரியாம போச்சே!

அத்தி பழத்துல இவ்வேளா நல்லது இருக்கா! இது தெரியாம போச்சே!

அத்தி

  அத்தி மரத்தின் இலை, பால், பழம் அனைத்தும் மருந்தாகப் பயன் அளிக்கின்றன.

 • இலைகளை உலரவைத்து பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதனைத் தேனில் சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.
 •   உடலின் எந்தத் துவாரத்தில் இருந்தும் இரத்தும் வெளியேறினால் இது கட்டுப்படுத்தும். வாய்ப்புண், ஈறுகள், சீழ்பிடித்தல் போன்ற நோற்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம். மரத்தின் பட்டையை இரவில் உலர வைத்து, காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவ வெளி மருந்தாக பயன்டுத்தலாம்.
 •   மரப்பட்டையை இடித்து, பசுவின் மோரில் உலர வைத்து, அதைக் குடித்தால் பெண்களக்கு அடிக்கடி உண்டாகும் பெரும்பாடு, மாதவிலக்க கட்டுப்படும்.
 •   அத்திப்பழம், அத்திப்பிஞ்சு, அத்திக்காய் மூன்றையும் சமைத்துச் சாப்பிடலாம். இது மூலம், இரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு, சீதபேதி, வெள்ளைப் பாடு, வாதநோய்கள், மூட்டுவலி, சர்க்கரை நோய், தொண்டைப் புண், வாய்ப்புண்ணுக்கு நல்ல மருந்தாகும்.
 • இது தசைகளை இறுக்கும் குணம் படைத்தவை. பழங்களை இடித்து, அதன் சாற்றைச் சாப்பிடுவதால் சிறுநீரக நோய்களைக் குணப்படுத்த உதவுகின்றன.
 •   அத்திகள் அத்திமர வேரில் இருந்து எடுக்கப்படுகிறது. இது சர்க்கரை நோய், மூலநோயைக் குணப்படுத்தும் என்று கூறப்படுகின்றது.அது மட்டும் அல்ல ,

 •   சிறுநீரப்பைப் புண், சிறுநீரப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.
 •   அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள். மேலும் இவை கல்லீரல் – மண்ணீர்ல் அடைப்புகள், வீக்கங்களைப் போக்க பயன்படுகிறது.
 •   கண்களின் பார்வையைக் கூட்டும் வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை அத்திப் பழத்தில் பெருமளவில் அடங்கியிருக்கின்றன.
 • மற்ற பழங்களைக் காட்டிலும் அத்திப் பழத்தில் 2 முதல் 4 மடங்கு அதிகமாக தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. இரும்புச் சத்து அத்திப் பழத்தில் அதிகமாக இருப்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தச் சோகை நோய் வராது. இரத்த உற்பத்தி அதிகரித்து, நோய் எதிர்ப்பாற்றலும் உடலில் அதிகரிக்கும்.
 •   சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திபழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.
 • சீரகம் மூலமா எவ்ளோ எடை குறைக்கலாமா ?- CLICK HERE https://www.youtube.com/watch?v=dJ44woLKEnQ 2,643 total views,  3 views today

கர்ப்பக் கால பிரச்சனைகளுக்கான எளிய தீர்வுகள் | Tips for a Healthy Pregnancy in Tamil

கர்ப்பக் கால பிரச்சனை:

https://www.youtube.com/watch?v=RRrG0V5h-OM&t=16s

வாந்தி [குமட்டல்] :-

 •  சாப்பாட்டிற்கு முன் 2 கி. ஏலரிசிப் பொடியை தேவையான எலுமிச்சம் பழச்சாற்றில் குழைத்து தொடர்ச்சியாக ஒரு சில நாட்கள் உட்கொண்டு வர கர்ப்ப காலத்தில் ஏற்படும் அஜீரணம் குமட்டல், வாந்தி தடுக்கலாம்.
 •  சுத்தமான நல்லெண்ணை சிறிதளவு பூப்பெய்தும் இளம் பெண்களுக்கு கொடுப்பார்கள். இவ்வாறு செய்தால் கருமுட்டை உற்பத்தி உறுப்புகள் சீராக செயல்படுகிறது. கருப்பையில் அழுக்கை அகற்றும் பணியையும் நல்லெண்ணெய் செய்கிறது.
 •  இளம் தென்னம்பூ வெயிலில் காய வைத்து தூளாக்கி காலை, மாலை 2 தேக்கரண்டி அளவு உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு ஆகியன குணமாகும்.
 •  தென்னம்பாலை இளசாகக் கொண்டு வந்து இடித்து சாறாக்கி அத்துடன் பசும்பால் சேர்த்து அருந்தி வர பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல் பெரும்பாடு ஆகியன குணமாகும்.
 •  மாவிலிங்கப்பட்டை அல்லது இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து குடித்து வர சுரம், வெள்ளை, வெட்டை, கல்லடைப்பு, சூதகப்பட்டு மற்றும் உடலில் ஏற்படும் குத்தல், குடைச்சல் குணமாகும். 2,070 total views

Bubble Gum அசைபோடும் பழக்கம் உள்ளவரா நீங்கள் – அசைபோடுவதும் ஆரோக்கியமே!

அசைபோடுவதும் ஆரோக்கியமே!
ஓட்டகத்தைவிட, அதிகமாக அசைபோடும் இளசுகளுக்காகவே, பலவித வண்ணங்கள் , சுவை, மணங்களில் சுயிங்கம்கள் கிடைக்கின்றன.

ஓய்வுநேரத்தில் சுயிங்கம் மெல்லுவது என்பது நிறையப் பேருக்கு பழக்கமாகவே மாறிவிட்ட நிலையில் இசுயிங்கம் மெல்லுவதால் வரும் நன்மைகள், பாதிப்புகள் குறித்து கோவையைச் சேர்ந்த வயிறு மற்றும் குடல்நலச் சிறப்பு மருத்துவரிடம் கேட்டோம்.“ நாம் அதிகம் பயன்படுத்தும் சுயிங்கம்கள் சர்க்கரையைப் பயன்படுத்தித் தயரிக்கப்படுகிறது. இது எல்லாக் கடைகளிலும் கிடைக்கும் சாதாரணவகை, மற்றொன்று, செயற்கைச் சர்க்கரையைக் கொண்டுதயாரிக்கப்படும் ‘சுகர் ஃப்ரீசுயிங்கம்’.
ஆரோக்கியத்தைக் கவனத்தில் கொண்டு, தற்போது மார்கெட்டில், புதுமையாக ‘சுகர்ஃப்ரீ’ இனிப்புகளைப் போல, இந்த ‘சுகர் ஃப்ரீசுயிங்கம்கள்’ வந்துவிட்டன.

சுகர் ஃப்ரீசுயிங்கம் மெல்லுவதன் மூலம் நன்மைகளும் உண்டு. சுயிங்கம் மெல்லும்போது நம்முடைய மூளையில் நினைவாற்றலுக்குப் பொறுப்பான பகுதி தூண்டப்படுகிறது என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. மேலும் மனஅழுத்தம் பதற்றத்தைப் போக்குகிறது. மனஅழுத்தம், பதற்றமான சூழ்நிலையில் ஒருசுயிங்கம் மெல்லும் போது அதுமனதை அமைதிப்படுத்துகிறது” என்கிற டாக்டர், சுயிங்கம் பற்றிமேலும் விரிவாகப் பேசினார்.

“சுயிங்கம் மெல்வது செரிமானத்துக்கும் உதவியாக இருக்கிறது. குறிப்பாக சாப்பிட்டதற்குப் பிறகு சுயிங்கம் மெல்வது மிகவும் நல்லது. இப்படிச் செய்யும்போது அதிக அளவில் எச்சில் சுரக்கப்பட்டு இரைப்பைக்குள் அனுப்பப்படுகிறது. இது வயிற்றில் உள்ள அமிலங்களைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், புளித்தஏப்பம் பிரச்னை உள்ளவர்கள், இதனை மெல்லும் போது உருவாகும் உமிழ் நீர், அமிலகாரத் தன்மையைச்சீர் செய்கிறது.உணவு உண்டபின் இதனை மெல்லுவதன் மூலம், பல் இடுக்குகளில் உள்ள உணவுத் துகள்கள் வெளியேற்றப்படும். இதனால், உணவுக்குப் பின் பல் தேய்ப்பது, மவுத் வாஷ் உபயோகிப்பது போன்றவற்றுக்கு அவசியமே இருக்காது. இது பல் மற்றும் தாடைகளுக்கு நல்லதொரு பயிற்சியாகவும் அமைகிறது.
வாய் துர்நாற்றம் இருப்பவர்கள், இந்த சுயிங்கத்தை மெல்லுவதன் மூலம், சுவாசப் புத்துணர்ச்சிகிடைக்கும். ‘ஜிராக்ஸ்டோமியா’எனப்படும்.

இயற்கையாகவே விழிநீர், உமிழ் நீர் சுரப்பு, குறைவாக உள்ள குறைபாடு உள்ளவர்கள், இந்தச் செயற்கைச் சர்க்கரை சுயிங்கம்களை மெல்லுவதன் மூலம், அதிலிருந்து மீள முடியும் “ என்றவர் சுயிங்கம் மெல்வதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பட்டியலிட்டார்.

“சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் சுயிங்கம்களை தொடர்ந்து மெல்லுவதன் மூலம், பற்சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. காரணம், அதில் உள்ளசர்க்கரை. பல் இடுக்குகளில் படிந்துள்ள பாக்டீரியாக்களுக்கு உணவாகிவிடுவதால், அவை வேகமாக வளர்ந்து பற்களைச் சிதைக்கும். இதனால் சிறுவர்கள், சிறுவயதிலேயே பல சம்பந்தப்பட்டபாதிப்புகளுக்கு ஆளாகலாம்.
மற்றொருபிரச்னை, சுயிங்கம்மைத் தெரியாமல் விழுங்கிவிடுவது, சுயிங்கம்மை விழுங்கினாலும் பாதிப்புகள் பெரியஅளவில் இருக்காது.

காரணம் இது உடலுக்குள் எங்கும் ஒட்டாமல் நமது குடலை அடைந்துவிட்டால், மிக எளிதாக மலத்தில் வெளியேறிவிடும். மாறாக இது உணவுக்குழாயில் ஒட்டிக்கொள்ளும் போதுதான், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும். சுயிங்கம்மைத் தெரியாமல் விழுங்கிவிட்டால், உடனடியாக அதிகப்படியான நீர் அருந்த வேண்டும். இது, சூவிங்கம் குடலை அடைந்து வெளியேறிவிடுவதற்காண வாய்ப்பை அதிகரிக்கிறது. இல்லையெனில் அறுவை சிகிச்சை மூலமே வெளியேற்ற இயலும்.
சுயிங்கம் பிரியர்கள் சுகர் ஃப்ரீசுயிங்கம் மெல்லுவதால், முகத்துக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்”

அசைபோடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்

 2,901 total views

சிறிது குடிப்பழக்கம் இருந்தாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்

சிறிது குடிப்பழக்கம் இருந்தாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்

மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால் அது கல்லீரலை பாதித்து விடும். இதன் காரணமாக கல்லீரல் செல்கள் நலிந்து கல்லீரல் இறுக்கி நோய் ஏற்பட்டுவிடும்.

அதிகமாக மதுவைக் குடிக்கும்போது அது முதலில் கல்லீரல் கொழுப்புகளைப் படிய வைக்கும். அந்த நிலையில் மதுவை நிறுத்தினால் கூட ஓரளவு குணம் கிடைக்கும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால் அதற்குப் பிறகும் தொடர்ந்து குடிக்கும்போது அது கல்லீரலைப் பெரிதும் பாதித்து கல்லீரல் இறுக்கி நோயை ஏற்படுத்தி விடக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்.

பொதுவாக, கிருமிகள் கல்லீரலை பாதித்து சுழற்சியை ஏற்படுத்தும் போது அவர்களுக்கு நோய் ஏற்படும்.

மஞ்சள்காமாலை ஏற்பட்டவுடன் அது எந்தக் காரணத்தினால் ஏற்பட்டது என்பதைக் கண்டறிய வேண்டும்.

ஏனெனில் பல்வேறு காரணங்களினால் மஞ்சள் காமாலை ஏற்படும். அதே நேரம் வைரஸ் கிருமிகளின் காரணமாக மஞ்சள் காமாலை ஏற்பட்டால் அது எந்த வைரஸினால் உண்டானது என்று கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

‘பி’ மற்றும் ‘சி’ வகை வைரஸினால் பாதிப்பு என்றால் இவர்களுக்கு கல்லீரல் இறுக்கி நோய் வர அதிக வாய்ப்பு உண்டு. அதனால் இவர்கள் அடிக்கடி பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் இவர்களுக்கு கல்லீரல் இறுக்கி நோய் மட்டுமல்லாமல் அது கல்லீரல் புற்று நோயாகவும் மாறிவிடக்கூடும் என்றும் கூறுகின்றனர்.
மேலும் பல தகவல்கள் எமது இணையதளத்தில் உள்ளது.

 3,000 total views

Health Benefits of Apples in Tamil | ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் இவ்ளோ நன்மைகளா!!

தற்போது அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய மிகவும் பிரபலமான மற்றும் பலரும் விரும்பி சாப்பிடும் பழம் தான் ஆப்பிள். ஆப்பிளில் பல வெரைட்டிகள் உள்ளன. அனைத்து வகையான ஆப்பிள்களும் ஒரே சத்துக்களைத் தான் கொண்டுள்ளது. ஒருவர் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. அந்த அளவில் ஆப்பிளில் ஏராளமான சக்தி வாய்ந்த உட்பொருட்கள் அடங்கியுள்ளன. அதில் ப்ளேவோனாய்டு, பாலிஃபீனால்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், பொட்டாசியம், பாஸ்பர், கால்சியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த ஆப்பிளை எப்போது சாப்பிடுவது சிறந்தது. ஆப்பிளை எப்போது சாப்பிட்டாலும், அதன் நன்மைகள் கிடைக்கும்.

 • ஆப்பிள் இரவு நேரத்தில் சாப்பிட ஏற்ற ஒரு அற்புதமான உணவுப் பொருள். இதில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் நல்ல கனவைப் பெற உதவும் கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாகவும், சிறிதளவு கொழுப்பு கூட இல்லை. ஆகவே இரவில் உங்களுக்கு திடீரென்று பசி எடுத்தால், ஆப்பிள் சாப்பிடுவது மிகவும் நல்லது.
 • ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவும். ஆப்பிளை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், குடலியக்கம் சிறப்பாக நடைபெற்று, மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் கழிவுகளை எளிதில் மலக்குடல் வழியாக வெளியேற்றும்.
 • எனவே உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள்.
 • புற்றுநோயைத் தடுக்கும் ஆப்பிள் புற்றுநோயைத் தடுக்கும். குறிப்பாக ஆப்பிள் மார்பக புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய் போன்றவற்றின் அபாயத்தைத் தடுக்கும்.
 • உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாது என்று நினைத்தால், தினமும் ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிடுங்கள். ஏனெனில் தோலில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.
 • யார் ஒருவர் நோய்வாய்ப் பட்டுள்ளார்களோ, அவர்கள் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், விரைவில் உடலுக்கு ஆற்றல் கிடைத்து, சோர்வின்றி புத்துணர்ச்சியுடன் இருப்பர்.
 • உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் அன்றாடம் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
 • இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டியது அவசியம்.

ஆப்பிளின் தோலில் உள்ள சக்தி வாய்ந்த ப்ளேவோனாய்டான க்யூயர்சிடின், இரத்த நாளங்களில் உள்ள அழற்சியைக் குறைக்கும். சுவாச பிரச்சனைகளைப் போக்கும் இன்று ஏராளமானோர் சுவாச பிரச்சனைகளால் அவஸ்தைப்படுகிறார்கள். குறிப்பாக ஆஸ்துமாவினால் கஷ்டப்படுகிறார்கள்.

 • ஆனால் ஆப்பிளை ஒருவர் தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், அதில உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், மூச்சுக்குழாய்களில் உள்ள அழற்சியைக் குறைத்து, சுவாச பிரச்சனைகள் வருவதைத் தடுக்கும்.
 • உங்களுக்கு முதுமையில் இம்மாதிரியான கொடுமை நடைபெறக்கூடாது என்றால், தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுங்கள்.தூங்கும் முன் ஆப்பிள் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? தூங்கும் முன் ஒரு ஆப்பிள் அல்லது ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிட்டால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடையைக் குறைக்கலாம் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

இது உண்மையா?

 • ஊட்டச்சத்து நிபுணரான அமாண்டா, இரவில் படுக்கும் முன் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம். ஏனெனில் ஆப்பிளில் பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. அதோடு ஆப்பிளில் உள்ள இயற்கை சர்க்கரை, இரத்த சர்க்கரை அளவை மெதுவாக அதிகரிக்கும்.
 • அதோடு ஆப்பிளில் கலோரிகளும் மிகவும் குறைவு. இரவில் சாப்பிடும் கலோரிகள் உடலில் கொழுப்புக்களாக மாறும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அது முற்றிலும் தவறு.
 • கலோரிகள் எப்போது கொழுப்புக்களாக மாறும் என்பது தெரியுமா? ஒருவரது உடலில் கலோரிகளானது கொழுப்புக்களாக மாறுவதற்கு ஒரு நாள் ஆகும். எனவே கலோரிகள் எப்போதுமே நாம் உட்கொண்ட உடனேயே கொழுப்புக்களாக மாறாது என்றும் அமாண்டா கூறுகிறார்.

உண்மையான காரணம் என்ன?

 • ஆப்பிளை இரவில் தூங்கும் முன் சாப்பிடுவது நல்ல என்று கூறுவதன் உண்மையான காரணம், இரவில் பசி எடுத்தால், அப்போது பிஸ்கட் அல்லது இதர பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டால், அதில் கார்போஹைட்ரேட்டுகள் இருக்கும். அதுவே பசியின் போது ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமும் மேம்படும், கலோரிகள் அல்லது கார்போஹைட்ரேட்டுகள் எதுவும் இருக்காது.
 • மேலும் இரவு நேரத்தில் உடலுக்கு ஆற்றலே தேவையில்லை. எனவே இரவில் பசிக்கும் போது கண்ட பழங்களுக்கு பதிலாக, ஒரு ஆப்பிளை சாப்பிடுங்கள், நிச்சயம் எவ்வித பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது.

 1,575 total views

Home Remedy for Kidney Stones in Tamil வீட்டு வைத்தியம் மூலம் சிறுநீரக கற்களை கரைக்கலாம்!!!

வீட்டு வைத்தியம் சிறுநீரக் கல்லை வெளியேற்ற வீட்டிலேயே மருந்து உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.

எலுமிச்சை மட்டும் போதும் சிறுநீரக கற்கள் காணமல் போகும்!!!

இது உண்மை தான் நண்பர்களே!!! எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!

அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.

சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது. பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது. எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர்.

தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை. இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


மேலும் சில குறிப்புகள்:-

 • தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
 • கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு 2 முறையாவது குடிப்பது நலம்.
 • பார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம்.
 • அகத்தி கீரையுடன் உப்பு சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.
 • வாழைத்தண்டு முள்ளங்கி சாறு 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும்.
 • வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
 • நீராகாரம் சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து.
 • பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
 • புதினாக் கீரையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.

எதை சாப்பிடக்கூடாது?

 • சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 • உப்பு பிஸ்கட்  சிப்ஸ் கடலை பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பை&கார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவைகளை தவிர்க்க வேண்டும்.
 • கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

சிறுநீரக கற்கள் பிரச்னை தீர பல வழிகள் உள்ளது.

மேலும் குறிப்புகள் தெரிந்து கொள்ள CLICK செய்யவும்.

மேலும் விரிவான பல தகவல்களை தெரிந்து கொள்ள எமது CHANNEL-ஐ SUBSCRIBE செய்யவும்.

 

 2,331 total views

Health Benefits of Banana in Tamil | வாழைப்பழத்துல இவ்வோ நல்ல விஷயம் இருக்கா!!

வாழைப்பழத்துல இவ்வோ நல்ல விஷயம் இருக்கா!!

This page will explained that varies health benefits of different types of banana.

எந்தக் காலத்துக்கும் ஏற்றது வாழைப்பழம். உடல் வளர்ச்சிக்கு அவசியமான எல்லாச் சத்துக்களும் இதில் அடங்கி உள்ளன.

ஒரு பெரிய வாழைப்பழம், திராட்சை பேரிச்சம்பழம் அத்திப்பழம் ஒரு சிறிய ஆப்பிள், ஒரு கோப்பை ஆரஞ்சு ரசம் ஆகியவற்றுக்குச் சமம். குளுகோஸ் சத்து அதிகம் இருப்பதால் வளரும் குழந்தைகள் நல்ல பலன் பெற முடியும்.

மலை வாழை:-

இது மலச்சிக்கலைப் போக்கி இரத்தத்தை விருத்தி செய்யும். மலச்சிக்கல் உள்ளவர்கள் தினசரி இரவில் இரண்டு பெரிய பழங்களைச் சாப்பிட்டு பின்னர் பசும் பால் அருந்தி வந்தால் உபாதை நீங்கும். குழந்தைகளுக்கும் இதனை ஒரு பழம் வீதம் கொடுக்கலாம்.

நேந்திர வாழை:-

இது கேரள மாநிலத்தில் உற்பத்தியாகிறது. நேந்திர வாழை கண் உபாதைகளை நிக்கி பார்வையை ஒளிபெறச் செய்யும்.

ரஸ்தாளி:-

இந்த பழத்தை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. ஏனெனில் இது பசி மந்தம் ஏற்படுத்தும்.

பூவன் வாழை:-

இந்த பழம் பசியை உண்டு பண்ணும். அதிகம் உண்டால் பசி அடங்கும்.

பேயன் வாழை:-

நீரழிவு, பருமன், இருமல், ஜலதோஷம் மற்றும் அஜீரணக் கோளாறுகள் உள்ளவர்கள் பேயன் வாழை உண்ணாமல் தவிர்க்க வேண்டும்.


பயன்களும் மருத்துவ குணங்களும்:-

இளமையின் இயற்கை ரகசியமாகப் போற்றபடுவது வாழைப்பழம். திசுக்களை புதுப்பிக்க உதவும், மேலும் உடம்பின் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஒரு செவ்வாழை பழம் தினமும் சாப்பிட்டால் நோய் நொடி இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்கலாம்.

மலம் கழிய அதிய அளவு நீர் உட்கொள்ள வேண்டும். அதற்கான பெருங்குடல் இயக்கத்தை இயல்பாக்க வாழைப்பழம் உதவும்.

மூட்டுவலி, முழங்கால் வீக்கம் இருந்தால் வாழைப்பழத்தை தொடர்ந்து 3- 4 நாட்கள் உணவாகக் கொள்ள நல்ல பலன் கிடைக்கும். தினம் 8 அல்லது 9 வாழைப்பழங்களை மட்டுமே நோயாளி உண்ண வேண்டும்.

சமைத்த வாழைப் பூவை தயிருடன் சேர்த்து உண்ண மாதவிடைக் கால வலி, மிதமிஞ்சிய இரத்தப் போக்கு கட்டுப்படும். வாழைப்பூ ப்ராஜெஸ்ட் ரோன் சுரப்பியை ஊக்குவிப்பதன் மூலம் மாதவிடைக் கால இரத்தப் போக்கை குறைக்கும்.

நன்கு பழுத்த வாழைப்பழத்தை அடித்துக் கலக்கி, மென்மையானபசை போல் செய்து கொள்ளலாம். காயங்களில் அதனைப் பரவலாகப் பூசி, துணிக்கட்டு போடலாம். இதில் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

காய்களை அவித்து உண்ணலாம். அவற்றில் ‘சிப்ஸ்’ தயாரித்து உண்ணலாம். வாழைபழம் குழந்தைகளுக்கும் நோயாளிகளுக்கும் நிறைவான உணவாக அமையும்.

வாழைபழத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. குளிர்சாதனப் பெட்டியின் தாழ்வெப்பநிலை பழங்களை முழுமையாய் பழுக்க விடாமல் தடுத்துவிடும்.

இன்னும் பலச் சிறப்புகள் வாழைபழத்தில் உள்ளது. ஆதலால் தினமும் ஒரு வாழைப்பழமாவது சாப்பிடுவது மிக மிக நல்லது.

இப்படிப்பட்ட வாழைப்பழத்தை நாம் தவிர்ப்பது சரிதானா??? சற்று கொஞ்சம்

சிந்தித்து பாருங்கள்!!!

            மேலும் பல நன்மைகளும் பயன்களும் வாழைப்பழத்தில் உள்ளது. அதனை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.

இந்த தகவல் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

 2,457 total views