தலைமுடி உதிர்வு காலம் எது தெரியுமா? What time does hair fall out

தலைமுடி உதிர்வு காலம் எது தெரியுமா?

முடி சூடும் மன்னரும் தலை முடி உதிர்ந்து போவதை விரும்பமாட்டார். செடி வளர நீர் முக்கியம் ஆனா முடி வளர ? இப்படி அத இதன்னு எதையாவது செஞ்சு முடிய வளத்துரனும் இந்த எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கும். அப்படி பார்த்து பார்த்து வளத்த முடி பாதியிலே உதிர்ந்து போறத ஏத்துக்கவே முடியாது. வந்தா மலை போனா முடின்னு முடி விஷயத்தில மட்டும் நம்ம சாதாரணமா இருக்கமாட்டோம்.

முடி பிரச்சனை பெரிய பிரச்சனை இன்னைக்கு எல்லோருக்கும் அது ஆண் பெண் யாரா இருந்தாலும் சரி. அப்படிபட்ட முடிய உதிர்வதற்கு முதல் காரணம் உடல் சூடு. நம்ம உடலின் சீதோஷ்ண நிலைய பொருத்து முடி உதிர்வு அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும். அதுவும் முக்கியமா கோடைகாலங்களில் முடி உதிர்வு அதிகமாகும். 

அப்படி முடி உதிர்ந்து போகும் காலங்களான வெயில் காலங்களில் உடலை குளிர்ச்சியாக வைக்க நாம் பிரத்யேகமாக சில செயல்களை கடைபிடிக்க வேண்டும்.

அவை,

 • வாரத்தில் ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளித்தல் வேண்டும். 
 • தினமும் தலை முடி வேர்களில் எண்ணெய் இருக்கும் படி பார்த்துக் கொள்வது அவசியம் . 
 • தலை முடியினை அதிகளவில் வறண்டு போகாமால் பார்த்துக் கொள்ள வேண்டும் அதிகளவில் தலைக்கு குளிக்கும் போது சேம்பு பயன்படுத்துவதை தவிர்த்தல் வேண்டும்.  
 • முடியினை அதிகளவில் சிக்காகமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 • வாகனங்களில் அல்லது சாலையில் நடந்து செல்லும் பொது தலையில் அதிகளவில் தூசி, புகை , புழுதி போன்றவற்றால் பாதிக்காமால் பாதுகாப்பாக பேணுதல் வேண்டும் . 
 • உளவியல் அடிப்படையில் அதிகளவில் கோபப்படுவர்கள், மன உளைச்சலில் இருப்பவர்கள், வருத்தப்படுவர்களுக்கு தலைமுடி குறைபாடு , முடியுதிர்வு பிரச்சனை நிச்சயமாக இருக்கும்.  • வைட்டமின் , குறைப்பாட்டினை ஈடு செய்ய வேண்டும், கீரை  வகைகளை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கருவேப்பிலை , கரிசலாங்கண்ணி போன்ற கீரைகள் அவசியம் பயன்படுத்த வேண்டும்.  
 • தலையில் எண்ணெய் பசை குறையும் போது தலையில் பொடுகு செதில்களாக காணப்படும் அவற்றால் முடியின் வேர்க்கால்களின் வலிமை குறைந்து முடி உதிர்வு பிரச்சனை எளிதில் ஆரம்பமாகும். 
 • அதிகளவில் மருந்து மாத்திரைகளை உபயோகிப்பதன் விளைவாக முடி உதிர்வு அதிகரிக்கும். சில பெண்களுக்கு பிரவசத்திற்கு பின் வரக்கூடிய காலங்களில் முடி உதிர்வு பிரச்சனை உருவாக வாய்ப்பு அதிகமுள்ளது. 
 • தலைகு குளிக்கும் போது அதிகளவில் சுடுதண்ணீர் பயன்படுத்துவதுகூட முடி உதிர்வு பிரச்சனைக்கு ஒரு காரணமாகும். 
 • தலையில் கலரிங்க் மற்றும் ஹேர் டை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் இவற்றில் இருக்கும் ஹெமிக்கல் மற்றும் நிறமிகளால் தலை முடியின்  வேர்கால்கள் வலிமை இழக்கின்றன. இதனால் முடி உதிர்வு பிரச்சனை வரக் கூடும். 
 • சிலருக்கு ஒரு குறிப்பிட்ட வயதை கடந்தபின்  அதிகபடியான தலை முடி குறைபாடு ஏற்படும் இதற்கு மரபணு ஒரு காரணமாகவும் இருக்கலாம். 

இப்படி முடி உதிர்வு மற்றும் தலை முடி குறைபாடு பிரச்சனைக்கு பலவித காரணங்கள் இருக்கும். ஆனால் சிலர் ஏன் முடி இப்படி உதிர்கிறது என புலம்பிக் கொண்டும் வருத்தப்பட்டும் வேறு வகை எண்ணெய் , வேறு வகை சேம்பு என மாற்றி மாற்றி உபயோகிப்பது இன்னும் கொடுமை.

மேலே சொல்லப்பட்ட இந்த ஆலோசனைகளை முறையாக கடைபிக்கும் போது முடி உதிர்வு பிரச்சனையில் இருந்து விடுபட முடியும் அல்லது இவை தான் முடி உதிர்வுக்கு காரணிகள் என்பதை அறிந்து இதற்கு சரியான தீர்வினை அறிந்து செயல்படுத்தலாம்.

முடி உதிர்வு மற்றும் தலைமுடி குறைபாடு பிரச்சனை அதிகம் உள்ளவர்கள் மருத்துவரின் அலோசனைகளை முறையாக பெற்று அதன்படி தலை முடியினை பராமரிப்பு செய்வது சிறப்பு.

தலைமுடி உதிர்வை தடுத்து அடர்த்தியாக வளர செய்யும் வழிமுறைகள் CLICK HERE — https://www.youtube.com/watch?v=bgXoSJCUVgM&list=PLUWrx5NJ9gFdUA4BfNxPmGz0EEoqOcD6Z 1,389 total views