தலைமுடி உதிர்வு காலம் எது தெரியுமா? What time does hair fall out

தலைமுடி உதிர்வு காலம் எது தெரியுமா?

முடி சூடும் மன்னரும் தலை முடி உதிர்ந்து போவதை விரும்பமாட்டார். செடி வளர நீர் முக்கியம் ஆனா முடி வளர ? இப்படி அத இதன்னு எதையாவது செஞ்சு முடிய வளத்துரனும் இந்த எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கும். அப்படி பார்த்து பார்த்து வளத்த முடி பாதியிலே உதிர்ந்து போறத ஏத்துக்கவே முடியாது. வந்தா மலை போனா முடின்னு முடி விஷயத்தில மட்டும் நம்ம சாதாரணமா இருக்கமாட்டோம்.

முடி பிரச்சனை பெரிய பிரச்சனை இன்னைக்கு எல்லோருக்கும் அது ஆண் பெண் யாரா இருந்தாலும் சரி. அப்படிபட்ட முடிய உதிர்வதற்கு முதல் காரணம் உடல் சூடு. நம்ம உடலின் சீதோஷ்ண நிலைய பொருத்து முடி உதிர்வு அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும். அதுவும் முக்கியமா கோடைகாலங்களில் முடி உதிர்வு அதிகமாகும். 

அப்படி முடி உதிர்ந்து போகும் காலங்களான வெயில் காலங்களில் உடலை குளிர்ச்சியாக வைக்க நாம் பிரத்யேகமாக சில செயல்களை கடைபிடிக்க வேண்டும்.

அவை,

 • வாரத்தில் ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளித்தல் வேண்டும். 
 • தினமும் தலை முடி வேர்களில் எண்ணெய் இருக்கும் படி பார்த்துக் கொள்வது அவசியம் . 
 • தலை முடியினை அதிகளவில் வறண்டு போகாமால் பார்த்துக் கொள்ள வேண்டும் அதிகளவில் தலைக்கு குளிக்கும் போது சேம்பு பயன்படுத்துவதை தவிர்த்தல் வேண்டும்.  
 • முடியினை அதிகளவில் சிக்காகமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 • வாகனங்களில் அல்லது சாலையில் நடந்து செல்லும் பொது தலையில் அதிகளவில் தூசி, புகை , புழுதி போன்றவற்றால் பாதிக்காமால் பாதுகாப்பாக பேணுதல் வேண்டும் . 
 • உளவியல் அடிப்படையில் அதிகளவில் கோபப்படுவர்கள், மன உளைச்சலில் இருப்பவர்கள், வருத்தப்படுவர்களுக்கு தலைமுடி குறைபாடு , முடியுதிர்வு பிரச்சனை நிச்சயமாக இருக்கும்.  • வைட்டமின் , குறைப்பாட்டினை ஈடு செய்ய வேண்டும், கீரை  வகைகளை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கருவேப்பிலை , கரிசலாங்கண்ணி போன்ற கீரைகள் அவசியம் பயன்படுத்த வேண்டும்.  
 • தலையில் எண்ணெய் பசை குறையும் போது தலையில் பொடுகு செதில்களாக காணப்படும் அவற்றால் முடியின் வேர்க்கால்களின் வலிமை குறைந்து முடி உதிர்வு பிரச்சனை எளிதில் ஆரம்பமாகும். 
 • அதிகளவில் மருந்து மாத்திரைகளை உபயோகிப்பதன் விளைவாக முடி உதிர்வு அதிகரிக்கும். சில பெண்களுக்கு பிரவசத்திற்கு பின் வரக்கூடிய காலங்களில் முடி உதிர்வு பிரச்சனை உருவாக வாய்ப்பு அதிகமுள்ளது. 
 • தலைகு குளிக்கும் போது அதிகளவில் சுடுதண்ணீர் பயன்படுத்துவதுகூட முடி உதிர்வு பிரச்சனைக்கு ஒரு காரணமாகும். 
 • தலையில் கலரிங்க் மற்றும் ஹேர் டை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் இவற்றில் இருக்கும் ஹெமிக்கல் மற்றும் நிறமிகளால் தலை முடியின்  வேர்கால்கள் வலிமை இழக்கின்றன. இதனால் முடி உதிர்வு பிரச்சனை வரக் கூடும். 
 • சிலருக்கு ஒரு குறிப்பிட்ட வயதை கடந்தபின்  அதிகபடியான தலை முடி குறைபாடு ஏற்படும் இதற்கு மரபணு ஒரு காரணமாகவும் இருக்கலாம். 

இப்படி முடி உதிர்வு மற்றும் தலை முடி குறைபாடு பிரச்சனைக்கு பலவித காரணங்கள் இருக்கும். ஆனால் சிலர் ஏன் முடி இப்படி உதிர்கிறது என புலம்பிக் கொண்டும் வருத்தப்பட்டும் வேறு வகை எண்ணெய் , வேறு வகை சேம்பு என மாற்றி மாற்றி உபயோகிப்பது இன்னும் கொடுமை.

மேலே சொல்லப்பட்ட இந்த ஆலோசனைகளை முறையாக கடைபிக்கும் போது முடி உதிர்வு பிரச்சனையில் இருந்து விடுபட முடியும் அல்லது இவை தான் முடி உதிர்வுக்கு காரணிகள் என்பதை அறிந்து இதற்கு சரியான தீர்வினை அறிந்து செயல்படுத்தலாம்.

முடி உதிர்வு மற்றும் தலைமுடி குறைபாடு பிரச்சனை அதிகம் உள்ளவர்கள் மருத்துவரின் அலோசனைகளை முறையாக பெற்று அதன்படி தலை முடியினை பராமரிப்பு செய்வது சிறப்பு.

தலைமுடி உதிர்வை தடுத்து அடர்த்தியாக வளர செய்யும் வழிமுறைகள் CLICK HERE — https://www.youtube.com/watch?v=bgXoSJCUVgM&list=PLUWrx5NJ9gFdUA4BfNxPmGz0EEoqOcD6Z 1,389 total views

வழுக்கை வராமல் தடுக்க வழி இருக்கு – தவறாம பாருங்க | Hair Fall tips in Tamil

வழுக்கை வராமல் தடுக்க வழிகள்  | Hair Fall tips in Tamil

இன்றைய இளைய தலைமுறையினரின் தலையாய பிரச்சினையாக வழுக்கை இருந்து வருகிறது. இதற்கு இன்னும் சரியான அதே நேரத்தில் எளிதான தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனால் சில நடைமுறைப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றி வந்தாலே முடி உதிர்வதைத் தடுத்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.

ஆண், பெண் இருபாலருக்கும் வழுக்கை ஏற்படுகிறது என்றாலும், பெரும்பாலும் ஆண்களுக்கே இது அதிகமாக ஏற்படுகிறது. ஆண்களுக்கு விழும் வழுக்கைக் காரணம் டெஸ்டஸ்டரோன் என்ற ஹார்மோன்தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஹார்மோன்களுக்கு எதிராக மரபுக் கூறினால் இந்த எதிர்வினை நிர்ணயிக்கப்படுகிறது.

விடலைப் பருவம் வந்தவுடன் ஆண் ஹார்மோன்கள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்குகின்றன. வழுக்கை மரபுக் கூறுகள் நம்மிடம் இருந்தால் பிரச்சனை வலுவடைகிறது. மரபுக் கூறுகளால் உருவாக்கப்பட்ட இது தலை முடியைப் பாதிக்கிறது.இளவயதிலேயே தொடங்கும் முடி உதிர்தல் நாளடைவில்தான் நம் கண்ணுக்குத் தெரிய வருகிறது, ஹார்மோன்கள் மட்டுமே முடி உதிர்வதற்குக் காரணம் அல்ல. கவலை, நீண்ட நாள் நோய், ஊட்டச் சத்தில்லாத உணவு, டைபாய்டு, காய்ச்சல், நீண்ட நேரம் தூங்காமல் விழித்திருப்பது போன்றவர்களுக்கும் முடி உதிரும் சூழ்நிலை உருவாகலாம். அதே போல் விரதம் இருப்பதின் காரணமாகவும் இந்த நிலை ஏற்படலாம் என்றும் டாக்டர்கள் கூறுகின்றனர்.

வழுக்கை வராமல் தடுக்க வழி இருக்கு – தவறாம பாருங்க | Hair Fall tips in Tamil

 1,428 total views

தேன் தடவினால் நரை முடி வருமா? இது உண்மையா? | Does Honey Make Hair White?

தேன் தடவினால் நரை முடி வருமா? இது உண்மையா?

Does Honey Make Hair White?

தேன் தடவினால் தலையில் உள்ள முடிகளெல்லாம் நரைத்துவிடும் என்று பலரால் நம்பப்படுகிறது. ஆனால் இது தவறான தகவல் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். முடி நரைப்பது அவரவர் மரபணுக்களைப் பொறுத்த விஷயம்.

முடியில் உள்ள ‘மெலனின்’ என்னும் நிறமியால்தான் நமது தலைமுடி கறுப்பாக உள்ளது மெலனின் உற்பத்தி குறைந்து விட்டால் முடி நரைக்கத் தொடங்கும். மெலனின் உற்பத்தி தொடர்வதும்இ நிற்பதும் மரபணு அமைப்பு மற்றும் சத்துக் குறைவு

ஆகியவற்றைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எது சுத்தமான தேன் ? எங்க வாங்கலாம் ? | Which Honey is pure in India? | Honey Test in Tamil https://www.youtube.com/watch?v=RZEVgGyryHU 1,712 total views

How to stop Hair Fall & get long strong hair in Tamil | தலைமுடி அடர்த்திய வளர

How to stop Hair Fall & get long strong hair in Tamil | தலைமுடி அடர்த்திய வளர

தேவையான பொருட்கள்:-

கற்றாலை இலை               – ஒரு இலை

வெந்தயம் (ஊறவைத்து) – ஒரு ஸ்பூன்

நெல்லிக்காய்                      – 1 அல்லது 2

கறிவேப்பிலை இலை  – ஒரு கைப்பிடி அளவு

செம்பருத்தி பூ                   – 2 பூ

செம்பருத்தி இலை         – சிறிதளவு

வேப்பிலை                            – சிறிதளவு

குறிப்பு:-

 • வெந்தயத்தை ஒரு நாள் முன்னர் இரவு ஊற வைக்கவும்.
 • கற்றாலை இலை நல்ல விளைந்ததாக இருக்கவும்.
 • நெல்லிக்காய் பெரியது எனில் ஒன்று சிறியது எனில் இரண்டு.

செய்முறை:-

ஊறவைத்த வெந்தயம், நெல்லிக்காய், கறிவேப்பிலை, செம்பருத்தி பூ, இலை, வேப்பிலை அனைத்தையும் தண்ணீர் ஊற்றாமல் மிக்ஸ்யில் அரைத்துகொள்ளவும். சற்று பரபரவென்று வந்த பிறகு கற்றாலை சாற்றை ஊற்றி மை போல அரைத்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் விதம்:-

இதை வாரம் ஒரு முறை தேய்த்து குளிக்கலாம். தலை முழுவதும் தேய்க்கவும். குறிப்பாக தலைமுடி அடர்த்தி குறைந்த இடத்தில் மற்றும் தலைமுடியின் நுனி பகுதில் தேய்க்கவும். தேய்த்த பின் அரை மணி நேரம் கழித்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். ஹெர்பல் ஷாம்பூ பயன்படுத்துதல் நல்லது. நேரம் கிடைக்கும் போது இதை செய்யலாம். வாரம் ஒரு முறை தவறாமல் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தவிர்க்க வேண்டியவர்கள்:-

 •  உடலில் குளிர்ச்சி அதிகம் உள்ளவர்கள் வெந்தயத்தை தவிர்க்கவும்.
 • கற்றாலையும் குளிர்ச்சி பொருளாகும் எனவே கற்றாலையை குறைத்துக் கொள்ளவும்.மேலும் கூடுதல் விரிவான விபரங்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்.

 

 

கறிவேப்பிலை பயன்கள்:-

 • கறிவேப்பிலை ஓர் அற்புதமான மருந்தாகும். மேலும் இதன் சாறு கண்களைப் பாதுகாத்து, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
 • ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்கும். ஊட்டச்சத்து குறைப்பாட்டால் முடி உதிரும் பிரச்னை சரியாகும்.
 • இதன் சாற்றுடன் சிறிதளவு எலுமிச்சைச் சாறும் தேவையான அளவு சர்க்கரையும் கலந்து அருந்திவர, அஜீரணத்தால் ஏற்படுகின்ற வாந்தி முதலியவைகளுக்கு பலன் தரும்.
 • நிழலில் உலர்த்திய கறிவேப்பிலையுடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றை பொடியாக்கி, சூடான சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட, முடி வளரும்.

கறிவேப்பிலை சாதம்:-

தேவையான கறிவேப்பிலை, உளுந்து, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை மிதமான தீயில் வதக்கி, பொடி செய்துகொள்ள வேண்டும். சூடான வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, சிறிதளவு கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு, தேவையான அளவு அரைத்த பொடியை சேர்த்து, அதனுடன் வடித்த சாதத்தையும் சேர்த்து கிளறி கறிவேப்பிலை சாதம் சாப்பிட்டு வரலாம்.

கறிவேப்பிலை துவையல்:-

தலா ஒரு டீஸ்பூன் உளுந்து, கடலைப்பருப்பை வாணலியில்  வறுத்து எடுக்கவும். சிறிது எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, இரண்டு சின்ன வெங்காயம், காரத்துக்கு ஏற்ற காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். மிக்ஸியில் இவற்றை சேர்த்து, உப்பு, தேங்காய், சிறிதளவு புளி சேர்த்து கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். துவையல் தயார். வாரம் இருமுறை சாப்பிட்டுவர முடி உறுதியாகும். முடி உதிர்தல் பிரச்சனை தடுக்கப்படும்.

இன்னும் நிறைய குறிப்புகள் எமது CHANNEL-யில் உள்ளது அதை பார்க்க SUBSCRIBE செய்யவும்.

 

 5,947 total views