குழந்தை உணவில் கட்டாயம் கவனம் தேவை

குழந்தை உணவில் கவனம் தேவை….


இன்று பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் குண்டாக மொழுமொழு என இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படி இருந்தால்தான் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என தவறாக எண்ணுகின்றனர். அதற்காக அவர்கள் டின்களில் அடைக்கப்பட்ட சத்து மாவுப் பொருட்கள், நொறுக்குத் தீனிகள் என பல்வேறு வகையான உணவுகளைக் கொடுக்கின்றனர். இது தவறான பழக்கமாகும்.

குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகள் விசயத்தில் பெற்றோர் அனைவரும் மிகுந்த கவனம் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
மாறிவரும் உணவுப் பழக்கமும், இயற்கையில் இருந்து செயற்கைக்கு மாறிய உணவுப் பழக்கமும், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளும், கலப்பட உணவுகளும், நிறமிகள் அதிகம் கலக்கப்பட்;ட உணவுகளும் குழந்தைகளின் உடல் நலத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

சத்துமாவு:-


சத்து மாவு என்ற பெயரால் பலசரக்கும் கடைகளிலும் மெடிக்கலிலும் கிடைக்கும் பொருளின் தரம் பற்றி பெற்றோர் யோசிக்க வெண்டும். சத்து மாவில் அவைக்காக கேசரிதால் எனும் சிவப்பு நிற பருப்பு வகைகளைச் சேர்க்கின்றனர். இதன் மூலம் லித்தியம் எனும் வேதிப்பொருள் உண்டாகி, கை கால்களை முடக்கும் தன்மை ஏற்படுகிறது. முளைவிட்ட தானியங்கள் என்று சொல்லி பாதியில் முளைவிட வைத்து அரைகுரையாக காயவைத்து பூஞ்சை இனம் சேர்ந்துள்ளது அறியாமல் சேர்த்து விடுகிறார்கள். இதனால் குடலில் அஜீரணம் உண்டாக வாய்ப்புகள் அதிகம். சோடியம் பென்சோவேட், பென்சாயிக் அமிலம் எனும் பதனப்பொருள் இந்த சத்து மாவு நாட்பட கெட்டுப் போகாமல் இருக்க சத்து மாவு நாட்பட கெட்டுப் போகாமல் இருக்க சேர்க்கப்படுகிறது. இது இந்த மாவில் உள்ள இயற்கை புரதங்களோடு சேரும்போது பல தேவையற்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.புரோட்டின் பவுடர்:

புரோட்டின் பவுடர்கள் குழந்தைகள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன என்று விளம்பரப்படுத்தும் கம்பெனிகள் ஏராளம். இயற்கையான புரோட்டின் உணவு குழந்தைகளுக்கு கொடுத்தால் அதன் பலன் நீடித்துக் கிடைக்கும். பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. ஆனால் செயற்கை புரோட்டின் பவுடர்கள் குழந்தைகளுக்கு உண்ண கொடுப்பதன் மூலம் இயற்கை உணவுகளில் உள்ள புரதத்தை உறிஞ்சும் திறனும், நுண்ணூட்ட சத்துக்கள் உறிஞ்சும் திறனும், நுண்ணூட்ட சத்துக்கள் உறிஞ்சும் திறனும் குறைந்து அதை கிரகிக்க உதவும் உறிஞ்சும் ரிசப்டார் செயல் இழந்தும் விடுகிறது. இதனால் தேவையான சத்துக்களை உட்கிரகிக்க முடியாமல் போகிறது. அதிக விலை கொடுத்து வாங்கி குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கும் இந்த புரோட்டின் பவுடர்கள் பலன் அளிக்காமல் வீணாக கழிவாக வெளியேற்றப் படுகிறது. இதனைப் பெற்றோர்கள் புரிந்துகொண்டு இயற்கையாக நமக்கும் கிடைக்கும் உணவில் எவ்வாறு புரோட்டின் உணவைக் கொடுப்பது என்று யோசிக்க வேண்டும்.

செரிலாக், நெஸ்டம் போன்ற குழந்தை உணவுகளில் பல நன்மைகள் இருந்தாலும் பவுடர் பாலில் உள்ள லேக்டிக் அமிலம் திரிந்து அசிடிக் அமிலமாகவும், லேக்டேட்டாகவும் மாறுகிறது… இந்த மாற்றம் ஒரு சில குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. மேலும் கேசின் என்ற என்ஸைம் செயல்பட முடியாத நிலையாக மாறி பாலே அலர்ஜியாக மாறிவிடும் நிலை ஏற்படுகிறது. இதுவும் ஒருசில குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

சாக்லேட்:

இன்று சாக்லேட் சாப்பிடாத குழந்தைகளே இல்லை. அந்த அளவுக்கு சாக்லேட் குழந்தைகளை அடிமைப்படுத்தி வைத்துள்ளது. பல சாக்லேட்டுகளில் உடலுக்கு ஊறு விளைவிக்கும் மிருக கொழுப்புகளும், சாக்கரின் எனும் செயற்கை சர்க்கரையும், பிரி ரேடிகல் எனும் கசடுகளும் கலந்துள்ளன. இவை குழந்தைகளுக்கு சர்க்கரை நோயையும் செரிமானத்தில் கோளாறுகளையும் ஹார்மோன்களின் அதிக சுரப்பையும் ஏற்படுத்துகின்றன.என்ன உணவு கொடுக்கலாம்:

குழந்தை நலத்தை விரும்பும் பெற்றோர் கடையில் விற்கப்படும் ஆயத்த உணவுகளை வாங்குவதைத் தவிர்த்து, சுகாதாரமான முறையில் வீட்டிலேயே உணவுப் பொருட்களை தயாரித்துக் கொடுக்கலாம். நாம் வாழும் பகுதியில் கிடைக்கும் இயற்கை உணவுகளையே பிரதான உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

 3,615 total views,  3 views today