பல் போனால் எல்லாம் போச்சு – பற்களில் ஏற்படும் தொந்தரவுக்கு தீர்வுகள் | Dental care tips in Tamil

பல் போனால் சொல் போச்சு” என்னும் முதுமொழிக்கு ஏற்ப பற்களை பாதுகாப்பது மிகவும் அவசியம். வாதம், பித்தம், கபம் அதிகரித்தால் பற்கள் கருமையாக, மஞ்சளாக மாறும். வெண்ணிறமாக இருக்கும் பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி சில சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

நிவாரணம்

  • இனிப்பு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்படும். எனவே எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளித்து பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும்.
  •  தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பதும், குளிர்ந்த நீரைக் குடிப்பது கூடாது.
  •  பப்பாளிச் செடியின் பாலை அல்லது எருக்கம் பாலை தொட்டி வலியுள்ள பல் மீது தடவி வர பல்வலி தீரும்.
  •  ஆலம் மொட்டை அல்லது பாகற்காய் இலையை அல்லது நந்தியா வட்டை வேரை எடுத்து வந்து அடிக்கடி பல்லினால் நன்றாக மென்று வாயிலே அடக்கி வைத்து பிறகு துப்பிவிட பல்வலி நீங்கும்.
  •  வன்னிக்காயை தண்ணீரில் கொதிக்க வைத்து வெது, வெதுப்பாக இருக்கும் போது வாயைக் கொப்பளிக்க பல் ஈறுகள் வீக்கம் & வலி நீங்கும். நாக்கு & வாய்ப்புண் ஆறும்.மேலும்,

  •  வாகை வேர்ப்பட்டையை நீர் விட்டுக் காய்ச்சி வெது, வெதுப்பாக இருக்கும் போது அதனைக் கொண்டு வாய் கொப்பளித்து வர வாய்புண் குணமாகும். பல்ஈறு உறுதியாகும்.
  •  பப்பாளிப் பழத்தை தொடர்ந்து நான்கு, ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல் கூச்சம் நீங்கி விடும். சர்க்கரை சத்து சேர்த்து விடும் என்ற பயம் வேண்டாம்.
  • வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தை குறைத்து சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

 2,856 total views,  3 views today