தலையில் பொடுகு, புழுவெட்டு நீங்க அருமையான வழி

தலையில் பொடுகு, புழுவெட்டு நீங்க அருமையான வழி

பொடுகு போக்க மருந்துகள்

 •  பொடுதலையை பூ, காய் இலையுடன் வெட்டி வந்து நன்றாக இடித்து சாறு ஒரு பங்கு, துளசி இலைச்சாறு ஒரு பங்கு, நல்லெண்ணெய் 3 பங்கு வீதம் காய்ச்சி தேய்க்க பொடுகு போகும்.
 •  செம்பருத்தி இலைகளை நைசாக அரைத்து தலையில் தடவி 10 நிமிடங்கள் கழித்து சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு மறைவதுடன் முடி அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் வளரும்.
 •  வெந்தயம் & கசகசாவை பாலில் ஊற வைத்து 7,8 மிளகு சேர்த்து மை போல் அரைத்து தலையில் சீயக்காயுடன் தேய்த்து, வாரத்தில் 2 முறை இவ்வாறாக குளித்து வரவும்.
 •  நயம் மூக்குப் பொடியைத் தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வர பேன்கள் ஒழியும்.
 • பொடுகு பிரச்னை நிரந்தரமாக தீர இதோ வழி https://www.youtube.com/watch?v=uhgqAycwU94&list=PLUWrx5NJ9gFdUA4BfNxPmGz0EEoqOcD6Z&index=8

முடியில் புழுவெட்டு நீங்க

 •  சிறு வெங்காயத்தை சிறிது கல் உப்புடன் தலையில் புழுவெட்டு ஏற்பட்ட இடத்தில் அழுத்தித் தேய்த்து வர அந்த இடத்தில் முடிகள் முளைக்கும்.
 •  ஊமத்தை பிஞ்சு காயை நன்கு அரைத்து, அதனுடன் உமிழ்நீரை(எச்சில்) கலந்து தலையில் புழுவெட்டு ஏற்பட்ட இடத்தில் பூசிவர அந்த இடத்தில் முடிகள் முளைக்கும்.தலைமுடிக்கு தைலம்

 • கருசலாங்கண்ணி இலையை அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி காயும் தேங்காய் எண்ணெயில் போட்டு சிடு சிடுப்பு அடங்கியதும் வடிகட்டி இந்த எண்ணெயைத் தலை முடிக்கு தடவி வந்தால் முடி உதிர்வது நீங்கும். முடியும் கருமையாக வளரும்.
 • மருதோன்றிப் பூவை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி இந்த எண்ணெயைத் தலைக்கு தடவி வந்தால் உடல் உஷ்ணம் குறையும். தீராத தலைவலி குணமாவதுடன் முடியும் நன்றாக வளரும்.
 • நெல்லிக்காயை வெயிலில் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி தலைக்குத் தடவி வர அல்லது தலையில் ஊறியதம் குளித்தால் முடி செழித்து வளரும். முடியும் உதிராது. இளநரையும் சிறிது சிறிதாக மறையும்.
 • தலைமுடி நீளமாக அடர்த்தியாக வளர https://www.youtube.com/watch?v=-kZselL3H8E&list=PLUWrx5NJ9gFdUA4BfNxPmGz0EEoqOcD6Z&index=7
 • பொடுகு பிரச்னை நிரந்தரமாக தீர இதோ வழி https://www.youtube.com/watch?v=uhgqAycwU94&list=PLUWrx5NJ9gFdUA4BfNxPmGz0EEoqOcD6Z&index=8
 • கடுக்காய்த் தூளை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து அந்த எண்ணெய் தலையில் தடவி வர செம்பட்டை முடி நாற்பது நாட்களில் கருமையாக மாறும்.
 • தலையில் பொடுகு, புழுவெட்டு நீங்க அருமையான வழி – இதனை முயற்சி செய்யவும். 3,204 total views,  3 views today

Cure dandruff at home in tamil | பொடுகு பிரச்சனைக்கு எளிமையான தீர்வு

Cure dandruff at home in tamil | பொடுகு பிரச்சனைக்கு எளிமையான தீர்வு

This video will explained that how to cure dandruff at home using home remedy in tamil.

Ingredients:-

 • Apple cider vinegar (ஆப்பிள் வினிகர்)
 • Lemon juice (எலுமிச்சை பழ சாறு)
 • Garlic (பூண்டு)

தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் விதத்தை தெரிந்து கொள்ள வீடியோ-வை முழுமையாக பார்க்கவும்.

மேலும் பல அழகுக் குறிப்புகள் தெரிந்து கொள்ள சேனலை SUBSCRIBE செய்யவும்.

Use any one of the above ingredients to cure dandruff permanently at home in tamil.

அறிகுறிகள்:-

தலையில் அரித்தல் மற்றும் சில தொந்தரவுகள் ஏற்படுவதே பொடுகுத் தொல்லையின் அறிகுறிகளாகும். சிவப்பு மற்றும் சற்று அரிப்பு ஏற்படுவது போன்ற சருமத்தின் உணர்ச்சிகள் போன்றவையும் இதன் அறிகுறிகள் ஆகும்.

குறிப்பு:-  கூந்தலின் மிக முக்கிய எதிரி பொடுகு. தலையில் அரிப்பையும், செதில் செதிலாக உதிர்ந்து ஒரு வித தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும். குளிர் காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகம் ஏற்படும். இதற்குக் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஒருவித நுண்ணுயிர்களே. மேலும் மன அழுத்தம், ஊட்டச் சத்துக் குறைபாடும் பொடுகு ஏற்பட காரணமாகும். எனவே ஆரோக்கியமான உணவு உட்கொண்டால் பொடுகை தவிர்க்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். மன அழுத்தம் இன்றி அமைதியை கடைபிடித்தால் பொடுகு வராமல் தவிர்க்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக அரிப்பு ஏற்படும். அரிப்பு நீங்கவும், பொடுகை போக்கவும் இயற்கையான வழிமுறைகளை தெரிவிக்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.மேலும் பின்வரும் எளிய குறிப்புகளையும் பயன்படுத்தலாம்.

 • வேப்பிலை, துளசி பூச்சித்தாக்குதலினால் பொடுகு ஏற்படுவது இயற்கை. எனவே அந்த மாதிரி நேரங்களில் ரசாயன ஷாம்புகளை பயன்படுத்துவதை தவிர்த்து வேப்பிலை கொழுந்து துளசி ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்தால் பொடுகுதொல்லை நீங்கும். துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்து கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும். வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறையும். எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய்எண்ணெய் கலந்து தலையில்தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம்பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சைபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்புபோட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும். தலைக்கு குளிக்கும்போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு வினிகர் சேர்த்து குளிக்கலாம்.
 • தேங்காய் பால் தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை தலையில் நன்றாக தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தல் பள பளக்கும். முதல்நாள் சாதம்வடித்த தண்ணீரை எடுத்துவைத்து, மறுநாள் அதை எடுத்து வைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். முட்டை வெள்ளைக் கரு, தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகுமறையும்.

 

 3,873 total views,  2 views today