தலையில் பொடுகு, புழுவெட்டு நீங்க அருமையான வழி

தலையில் பொடுகு, புழுவெட்டு நீங்க அருமையான வழி

பொடுகு போக்க மருந்துகள்

 •  பொடுதலையை பூ, காய் இலையுடன் வெட்டி வந்து நன்றாக இடித்து சாறு ஒரு பங்கு, துளசி இலைச்சாறு ஒரு பங்கு, நல்லெண்ணெய் 3 பங்கு வீதம் காய்ச்சி தேய்க்க பொடுகு போகும்.
 •  செம்பருத்தி இலைகளை நைசாக அரைத்து தலையில் தடவி 10 நிமிடங்கள் கழித்து சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு மறைவதுடன் முடி அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் வளரும்.
 •  வெந்தயம் & கசகசாவை பாலில் ஊற வைத்து 7,8 மிளகு சேர்த்து மை போல் அரைத்து தலையில் சீயக்காயுடன் தேய்த்து, வாரத்தில் 2 முறை இவ்வாறாக குளித்து வரவும்.
 •  நயம் மூக்குப் பொடியைத் தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வர பேன்கள் ஒழியும்.
 • பொடுகு பிரச்னை நிரந்தரமாக தீர இதோ வழி https://www.youtube.com/watch?v=uhgqAycwU94&list=PLUWrx5NJ9gFdUA4BfNxPmGz0EEoqOcD6Z&index=8

முடியில் புழுவெட்டு நீங்க

 •  சிறு வெங்காயத்தை சிறிது கல் உப்புடன் தலையில் புழுவெட்டு ஏற்பட்ட இடத்தில் அழுத்தித் தேய்த்து வர அந்த இடத்தில் முடிகள் முளைக்கும்.
 •  ஊமத்தை பிஞ்சு காயை நன்கு அரைத்து, அதனுடன் உமிழ்நீரை(எச்சில்) கலந்து தலையில் புழுவெட்டு ஏற்பட்ட இடத்தில் பூசிவர அந்த இடத்தில் முடிகள் முளைக்கும்.தலைமுடிக்கு தைலம்

 • கருசலாங்கண்ணி இலையை அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி காயும் தேங்காய் எண்ணெயில் போட்டு சிடு சிடுப்பு அடங்கியதும் வடிகட்டி இந்த எண்ணெயைத் தலை முடிக்கு தடவி வந்தால் முடி உதிர்வது நீங்கும். முடியும் கருமையாக வளரும்.
 • மருதோன்றிப் பூவை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி இந்த எண்ணெயைத் தலைக்கு தடவி வந்தால் உடல் உஷ்ணம் குறையும். தீராத தலைவலி குணமாவதுடன் முடியும் நன்றாக வளரும்.
 • நெல்லிக்காயை வெயிலில் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி தலைக்குத் தடவி வர அல்லது தலையில் ஊறியதம் குளித்தால் முடி செழித்து வளரும். முடியும் உதிராது. இளநரையும் சிறிது சிறிதாக மறையும்.
 • தலைமுடி நீளமாக அடர்த்தியாக வளர https://www.youtube.com/watch?v=-kZselL3H8E&list=PLUWrx5NJ9gFdUA4BfNxPmGz0EEoqOcD6Z&index=7
 • பொடுகு பிரச்னை நிரந்தரமாக தீர இதோ வழி https://www.youtube.com/watch?v=uhgqAycwU94&list=PLUWrx5NJ9gFdUA4BfNxPmGz0EEoqOcD6Z&index=8
 • கடுக்காய்த் தூளை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து அந்த எண்ணெய் தலையில் தடவி வர செம்பட்டை முடி நாற்பது நாட்களில் கருமையாக மாறும்.
 • தலையில் பொடுகு, புழுவெட்டு நீங்க அருமையான வழி – இதனை முயற்சி செய்யவும். 3,204 total views,  3 views today