ஆஸ்துமாவிற்கு இவ்ளோ எளிய மருந்து இருக்கா?

ஆஸ்துமா நோய்க்கு எளிய தீர்வு

ஆஸ்துமா என்பது ஒவ்வாமையால் ஏற்படும் நோய் என்பது அனைவரும் அறிந்ததே. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். போதிலும் கூட ஆஸ்துமா தொல்லைக்கு பலர் ஆட்பட்டு வருகின்றனர்.

நவீன சிகிச்சை முறைகளில் ஆஸ்துமாவை நிரந்தரமாக சரிசெய்ய முடிவதில்லை. தற்காலிக சிகிச்சைகளே உள்ளன. மேலும் ஆஸ்துமாவிற்கு கொடுக்கப்படும் மருந்துகள் நோயாளிகளை மருந்தடிமைகளாக மாற்றிவிடுகிறது. மேலும் இவை ஆஸ்துமாவை நிரந்தரமாக்கிவிடுகின்றன.

இந்த ஆஸ்துமா நோயானது உருவாக காரணமாக சுற்றுச்சூழல், உணவு முறை, மனச்சிக்கல் மற்றும் பரம்பரையாக தோன்றுதல் போன்ற காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆனாலும், உணவு பழக்காத் தவறுகளால் ஏற்படும். ஒவ்வாமை, மற்றும் அதனால் உள் உறுப்புகளில் ஏற்படுகிற மாறுபாடு போன்றவற்றின் அறிகுறியே ஆஸ்துமா என்கிறது சித்த மருத்துவம்.

எனவே, ஆஸ்துமாவிற்கு சரியான சிகிச்சை என்பது கழிவகற்ற உறுப்புகளின் பழுதை நீக்கி, அதை நல்ல முறையில் செயலாற்றத் தூண்டுவது மற்றும் முறையான உணவுப் பழக்க வழக்கங்களால் வேஸ்ட் மற்றும் பொருட்களை உடலிலலருந்து அகற்றுவதுமேயாகும்.

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு திட்டமிடல் மற்றும் வாழ்வியல் முறைகளை மாற்றியமைத்துக்கொண்டால் நோயிலிருந்து விடுபட வாய்ப்புகள் உண்டு.

உணவுப்பழக்கம்:

 1. ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கம் வேண்டும். காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள்,
  தானியங்கள் என்று பரவகைப்பட்ட உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் மூன்று நான்கு முறை பழங்கள் சாப்பிடுவது நல்லது.
 2. வைட்டமின் ‘சி’ சத்து மற்றும் வைட்டமின் ‘1’ சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் ஆஸ்துமா வரும் வாய்ப்பைக் குறைக்கலாம்.
 3. சில உணவுகள் ஆஸ்துமாவிலிருந்து பாதுகாப்பு தருவதோடு நுரையீரல் செயல்பாட்டையும் மேம்படுத்தும். பச்சைக் காய்கறிகளில் பயோ- ஃபிளேவனாய்ட்ஸ் நிறைந்துள்ளது. இது ஃரீ ரேடிகல்ஸ்ஸை தணிக்க உதவுகிறது.
 4. ஆப்பிள், வெங்காயம் போன்றவை ஆஸ்துமானால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த மருந்தாகிறது. ஆப்பிளில் குறிப்பாக கெல்லின் என்ற ஃபிளேவனாய்டு உள்ளது. இது மூச்சுக் குழலின் அடைப்பை நீக்கி மூச்சு சீராகச் செல்ல உதவும். வெங்காயம் மூச்சு வழிப்பாதையை தெளிவுபடுத்தும்.
 5. இஞ்சி, மூச்சுப்பாதை அழற்சியைத் தணிக்கும். மூச்சுப்பாதை இறுக்கத்தைப் போக்கும்.ஆஸ்துமா நோய்க்கு சில எளிய சிகிச்சை:

 1. ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை ஒரு கப் தண்ணீரில் நன்றாக கொதிக்கவைத்து அதில் இஞ்சிச்சாறு மற்றும் தேன் தலா ஒரு தேக்கரண்டி கலந்து தினமும் காலை மாலை அருந்தி வந்தால் சிறந்த நிவாரணம் கிடைக்கும். நுரையீரல் நச்சை முறிக்க வெந்தயநீர் உதவுகிறது.
 2. கொதிக்கிற நீரில் நான்கைந்து பூண்டுப் பற்களைப் போட்டு ஐந்து நிமிடத்திற்கு மூடிவைத்து, சற்று ஆறியபின் அந்நீரை அருந்தினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
 3. உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். அதற்குப் பதிலாக கார்ப்புச் சுவை தரும் நறுமணம் பொருட்களாக துளசி, கொத்தமல்லி போன்றவற்றை பயன்படுத்தலாம்.
 4. கொதிக்கிற நீரில் கொஞ்சம் மஞ்சள் தூள் சிறிது இஞ்சித்துண்டு போட்டு படுக்கைக்குப் போகும் முன், 50மிலி அளவு குடித்து வந்தால் ஆஸ்துமா நோயின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.
 5. உலர்ந்த அத்திப்பழம் 3 எடுத்து தண்ணீரில் இரவு முழுவதும் ஊறப்போட்டு காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரைக் குடித்து வந்தால், சளி நீங்கி, சுவாச நலம் மேம்படும்.
 6. ஒரு தேக்கரண்டி தேனில் அரை தேக்கரண்டி இலவங்கத் தூள் கலந்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட்டால், மார்பில் சேர்ந்துள்ள சளியை வெளியேற்றும். மூச்சு விடுவதை இலகுவாக்கி, நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.
 7. இஞ்சிச்சாறு, மாதுளை சாறு மற்றும் தேன் சம அளவு எடுத்து கலந்து ஒரு தேக்கரண்டி வீதம் தினம் மூன்று வேளை அருந்தினால் ஆஸ்துமா நோய் மட்டுப்படும் 3,507 total views