உங்களுக்கு நீர்க்கட்டி இருக்கா??

உங்களுக்கு நீர்க்கட்டி இருக்கா??

How to cure pcod pcos fast in tamil??

நீர்க்கட்டி ஏற்பட்டால் :

பெண்களுக்கு அடுத்து ஏற்படும்  முக்கிய  பிரச்சனை  நீர்க்கட்டி. இது, மாதவிடாய் கோளாறுகளால் பாதிக்கப்படும்  பெண்களுக்கு  ஈஸ்ரோஜன் ஹார்மோன், பேலன்ஸ் செய்யப்படாததால் ஏற்படுகிறது.

நெல்லிக்காய்  :

பெரிய நெல்லிக்காயை சாறு  எடுத்து, அதில் ஒரு ஸ்பூன்  தேன் கலந்து குடிக்கலாம். நெல்லிக்காயில் உள்ள பீட்டாக்சின் பைன் தேவையற்ற  கொழுப்புகளையும்  கழிவுகளையும் வெளியேற்றுகிறது. ஹார்மோனை சரிசெய்கிறது.

நீர்க்கட்டிக்கு சீரகத் தண்ணீர்  :

சீரகத்தை  ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு காய்ச்சி பனை வெல்லம்  போட்டு குடிக்கலாம். இது சுகரை  குறைக்கிறது. சீரகத்தில் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. பனைவெல்லம் இன்சுலின்  சுரப்பதை அதிகரிக்கிறது. தவிர, வெல்லத்தில் இரும்புச்சத்தும் உண்டு. இது கால்சியத்தையும் அதிகரிக்கும்.  வெல்லத்திற்க்கு பதிலாக வெள்ளை சர்க்கரையை  பயன்படுத்தினால், எலும்பு தேய்மானம்  உண்டாக்கும்.


கருஞ்சீரகம் :

நீர்க்கட்டிக்கு  கருஞ்சீரகத்தை பொடி செய்து, பனைவெல்லம், தேங்காய்த்துருவலோடு சேர்த்து சாப்பிடலாம். இது ஆன்டி டயாபடிக்காகவும் செயல்படுகிறது. இதில் ஈஸ்ட்ரோஜெனிக் ப்ராபர்டியும் உள்ளது.

நீர்க்கட்டிக்கு கற்றாழை :

கற்றாழை சாறோடு தேங்காய்ப்பால் சேர்த்து பருகலாம். இது ஒவரியில் உள்ள ஸ்டீராய்ட்ஸை சமன் செய்து, நீர்க்கட்டியை குணப்படுத்துகிறது.

நீர்க்கட்டிக்கு திருமேனி பச்சிலை :

திருமேனி பச்சிலை செடியின்  விதைகளில் ஒமேகா-3-பேடிக் ஆசிட் உள்ளது. இதில்  உள்ள  ஆன்டி ஆக்ஸிடென்ட் நீர்க்கட்டியை குணப்படுத்துவதோடு சுகர், கொலஸ்ட்ராலை குறைக்கிறது. ஹான்மோன்களையும் சமன்படுத்துகிறது. இதை மாதுளை, பைனாப்பிள், பப்பாளி, ஆப்பில் சேர்த்து  சாலட் பண்ணியும் சாப்பிடலாம்.

நீர்க்கட்டிக்கு வெந்தயம் :

வெந்தயத்தை பொடி செய்து  மோரில் கலந்து சாப்பிடலாம். தவிர, வெந்தயத்தை முளைகட்ட வைத்து, முளைகட்டிய பச்சைப் பயறோடு சேர்த்து சாப்பிடலாம். இது ஹார்மோன்களை சமன்படுத்துவதோடு, க்ளுக்கோஸை எனர்ஜியாக பயன்படுத்த உதவுகிறது.

நீர்க்கட்டிக்கு எள் :

எள், தேங்காய், பனைவெல்லம், உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழம் இவற்றை சேர்த்து லட்டு செய்து சாப்பிடலாம். இதில்  உள்ள  க்ளுக்கோஸ் ஆரோக்கியமான  கொழுப்பை அதிகரிக்கிறது. ரத்தத்தில் க்ளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகிறது. தவிர, இதில், கால்சியம், மெக்னீசியம், ஸிங்க் அதிகம் உள்ளது.

நீர்க்கட்டிக்கு சோம்பு :

சோம்பு, சீரகம், ஆலிவ் விதை இவை மூன்றையும்  பொடி செய்து, ஒரு ஸ்பூன் சாப்பிடலாம். இது ஆண்களுக்கு சுரக்கும் ஆன்ட்ரோஜன் ஹார்மோனை பெண்களுக்கும் அதிகம் சுரக்க வைத்து, முடிவளர்வதை தடுக்கிறது.

இது போன்ற பல பயனுள்ள தகவல்கள் குறிப்புகள் எமது CHANNEL-லில் உள்ளது.  CHANNEL-ஐ பார்க்க SUBSCRIBE  BUTTON-ஐ CLICK செய்யவும்.

https://www.youtube.com/c/pallanduvazhga

மேலும் முழுமையாக விபரங்களுக்கு வீடியோவை பார்க்கவும்.

அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்த:-

Reasons & Tips for PCOD & PCOS in Tamil | நீர்க்கட்டி வரக் காரணங்கள் மற்றும் தீர்வுகள்

 

 9,923 total views,  24 views today

One Reply to “உங்களுக்கு நீர்க்கட்டி இருக்கா??”

  1. I am usually to running a blog and i really recognize your content. The article has really peaks my interest. I am going to bookmark your website and preserve checking for new information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *