மூலம் பிரச்சனை இனி இல்லை |Treatment for piles at home in tamil

மூலம்

நிவாரணங்கள்:

  • தண்டுக் கீரையில் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் மிகுந்துள்ளது. இது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். மூலநோய் உள்ளவர்கள் இந்தக் கீரையை அடிக்கடிச் சமைத்து உண்ண மூலநோய் கட்டுப்படும்.
  •  நாயுருவி இலை & தண்டு, மிளகு இந்த மூன்றையும் தேன் விட்டு அரைத்துக் கொட்டை பாக்கு அளவு சாப்பிட தீராத மூல நோயும் தீரும்.
  • ஆவாரை கொழுந்தை விளக்கெண்ணை விட்டு வதக்கி ஒற்றடமிட மூலமுனை கருகும். அதனால் ஏற்படும் கடுப்பும், ஊறலும் தணியும்.
  • நல்லெண்ணைணை உடலில் தேய்த்து குளித்தால் அது மூலச் சூட்டை தணிக்கும். மேலும் அது உடலில் படியும் எண்ணெய் பசையை அகற்றி தோல் பகுதியை சுத்தமாக வைத்திருக்க இது உதவுகிறது. இதனால் வியர்வை வெளியேற்றம் சீராக நடைபெறும்.



மேலும்,

  • பசும்பாலில் ஒரு துளி எலுமிச்சை சாற்றை கலந்து குடித்துவர ரத்த மூலம் கட்டுப்படும்.
  • அத்திப்பால் அத்திமர வேரிலிருந்து எடுக்கப்படுகிறது. இது மூலச் சூட்டை தணிக்கும். மேலும் சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்தும்.
  • நார்ச் சத்துள்ள கோதுமை, கொண்டைக் கடலை, புதினா கீரை, கறிவேப்பிலை, வெங்காயம், முட்டைகோஸ் முதலியவற்றில் தினமும் ஏதாவது ஒன்றை உணவில் சேர்த்துக் கொண்டால் மூலநோய் கட்டுப்படுவதுடன் குடல் புற்றுநோய் வராது.
  •  ஆவரைக்  கொளுந்து, பூ, பட்டை இவற்றுடன் அருகின்வர்  சூரணம்  சேர்த்து அரைத்து, அதில் இரண்டு சிட்டிகை அளவு எடுத்து பசும் நெய்யில் 48 நாட்கள் உட்கொள்ள உள்மூலம் குணமாகும்.

மேலும் வீடியோ வழியில் தெரிந்து கொள்ள ,

 1,499 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *